Thursday, September 22, 2016

கி.ரா-டி.கே.சி

இன்று (22.09.2016) புதுச்சேரியில் கி.ரா அவர்களின் இல்லத்தில் அவரை,தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், கல்கி ப்ரியன், நானும் சில மணி நேரம் சந்தித்துப் பல கடந்த கால செய்திகளைக் குறித்து விவாதித்தோம்.

பெரியார்-மணியம்மை திருமணத்தைக் குறித்து திருவண்ணாமலையில் பெரியார் -மூதறிஞர் ராஜாஜி அவர்களை சந்தித்துப் பேசிய போது இரசிகமணி டி.கே.சி உடனிருந்ததாகவும் உரிய விபரங்களுடன் கி.ரா எங்களிடம் கூறினார்.
ஆங்கிலேயர் ஆட்சியில் பாரதியார் பாடல்கள் தடை செய்யப்பட்டதை நீக்க வேண்டும் என தமிழ்நாடு மேலவையில் நீதிக்கட்சியின் மேலவை உறுப்பினராக இருந்த இரசிகமணி தடையை நீக்க கடுமையாக வாதிட்டார் என்ற செய்தியையும் சொன்னார். இப்படி கி.ரா குறிப்பிட்ட அரிய பழைய செய்திகளை நாளை முழுமையாக பதிவு செய்யலாம் என உள்ளேன்

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...