Friday, February 12, 2021

#உரிமைக்கு_குரல்_கொடுப்போம்_1995ல்_வெளியான_என்_நூல்_பதிவு


நாட்டின் விடுலைக்கு பின்,சென்னை இராஜதானியில 1952ஆம் ஆண்டுகுமாரசாமி ராஜா தலைமையில் இருந்த 5பேர் அமைச்சரவை கவிழ்ந்த பின்,மாநிலங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இதே போன்று முதன் முதலில் அரசியல் குழப்பங்கள் சென்னை மாகாணத்தில் நிகழ்ந்தது.
1952 ஆம் ஆண்டு ஆந்திரா, மலபார் பகுதிகள் சில, தமிழகத்தை உள்ளடக்கிய அப்போதைய சென்னை மாகாணத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 375 தொகுதிகளில் 152 ல் மட்டுமே ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அப்போது, கம்யூனிஸ்ட்கள் பிற கட்சிகளுடனும், சுயேச்சைகளுடனும் இணைந்து ஆட்சி அமைக்க அழைக்க வேண்டுமென்று ஆளுநர் பிரகாசத்தை நிர்பந்தம் செய்தனர்.
யாரை ஆட்சி அமைக்க அழைப்பது என்ற குழப்பம் ஆளுநருக்கு ஏற்பட்டது.
எவரும் எதிர்பாராத நிலையில் நிலையான ஆட்சியை வழங்க ராஜாஜி ஒருவரால் தான் முடியும் என்று நம்பிய ஆளுநர் ராஜாஜியை ஆட்சியமைக்க அழைத்தார்.
அப்போது தான் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்து பின்னர் உள்துறை அமைச்சர் என்கிற பெரும் பொறுப்பையும் ராஜாஜி வகித்து முடித்திருந்தார்.
இதனால் சென்னை மாகாண ஆட்சிப் பொறுப்பை ஏற்க ராஜாஜி தயங்கினார். தேர்தலில் நின்று வெற்றி பெறாத ஒருவரை எப்படி பதவி ஏற்க அழைக்கலாம் என்கிற கேள்விகள் எழுந்தன. இலக்கிய கர்த்தா நிலையில் ராஜாஜியை ஆளுநர் மேலவை உறுப்பினராக நியமித்து முதல்வரனார்.
கேரளாவில் இது போல 1950ல்
பட்டம் தாணு பிள்ளை 14 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்டு ஆட்சி அமைத்தார்.

ராஜாஜி முதல்வரான விதம் அன்று எல்லோருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட மூதறிஞர் ஆட்சியில் சில கடுமையான முடிவுகளை எடுத்தார். அவர் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து காமராஜர் முதல்வர் பொறுப்பேற்றார்.
(உரிமைக்கு குரல் கொடுப்போம்
1995ல் வெளியான என் நூலில்
பதிவு )
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
12.02.2021

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...