Tuesday, February 16, 2021

#பட்டாசு_ஆலை_விபத்து


——————————————————-
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த சாந்தனமாரி அச்சங்குளத்தில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். நேற்று நண்பகலில் பட்டாசு ஆலையில் பெரும் விபத்து ஏற்பட்டு 5 பெண்கள் உட்பட 17 பேர் இறந்துள்ளனர். இந்த வெடி விபத்து தொடர்ந்து சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்னை பகுதிகளில் நடந்து கொண்டே இருக்கின்றன. இந்த விபத்துக்களை தடுப்பதற்கு தொடர்ந்து குரல் கொடுத்தாலும் பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நடந்தவண்ணம் உள்ளது.

விதி மீறிய பட்டாசு ஆலைகளுக்கு உரிமங்கள் வழங்கப்படுகின்றன. வேதனையிலும் வேதனையாக உடல் கருகி உயிரோடு சாகும்போதே மனம் எவ்வளவு கொந்தளிக்கும். இது தொடர்கதையாக நடக்கின்றது. இதை கட்டுப்படுத்தாமல் விபத்து நடக்கும் போது மட்டும் அறிக்கைகள், கண்டங்கள், இழப்பீடுகள் என்று சொல்லிக் கொண்டே விபத்துக்களை தடுக்கும் எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நேற்று நடந்த விபத்தில் 70 பேர் அந்த ஆலையில் வேலை செய்துள்ளனர். பேன்ஸி ரக வெடிகள் செய்ய மருந்து செலுத்தும்போது உராய்வு ஏற்பட்டு இந்த விபத்து எற்பட்டுள்ளது. இது குறித்து நான் தினமணியில் எழுதிய கட்டுரையையும் இத்துடன் இணைத்துள்ளேன். இந்த விபத்துகள் முழுமையாக தடுக்கப்படவேண்டும், அதற்கான நடவடிக்கைகள் தான் முக்கியமே தவிர இழப்பீடு கொடுத்து உயிர்களைத் திரும்ப பெறமுடியாது.
•••••••
இதற்கு முன் நடந்த பெரிய வெடி விபத்துகள்:
1. 2005 ஜூலை 2: சிவகாசி மீனம்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 20 பேர் பலி.
2. 2009 அக்டோபர் 16: திருவள்ளூர் பள்ளிப்பட்டு பட்டாசு குடோன் வெடி விபத்தில் 32 பேர் பலி.
3. ஆகஸ்டு 24: சிவகாசி நமஸ்கரித்தான்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் 15 பேர் பலி.
4. ஜூலை 8: உசிலம்பட்டி அருகே பட்டாசு ஆலை விபத்தில் 16 பலி.
5. 2011 ஆகஸ்டு 8: சிவகாசி காளையார்குறிச்சி பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் பலி.
6. 2012 செப்டம்பர் 5: சிவகாசி முதலிப்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் 40 பேர் பலி.
7. 2021 பிப்ரவரி 12: சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 17 பேர் பலி.
நேற்று அச்சங்குளத்தில் பட்டாசு தொழிற்சாலை விபத்து இன்று சிவகாசி அருகே காக்கிவாடன் பட்டியில் விபத்து மிக வருத்தமானது.
2017 – 2021 விபத்து விவரம்

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
13.02.2021

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...