Tuesday, February 16, 2021

#தூத்துக்குடி_வரலாறாய்_வாழும்_வாடித்தெரு


———————————————————
தூத்துக்குடி நகரின் திரேஸ்புரம் கடற்கரை அருகில் உள்ளது வாடித்தெரு. வீதியின் நுழைவு வாயிலில் 270 ஆண்டுகள் பழைமையான ஆர்ச் உள்ளது. சமீபத்தில் இது வ.உ.சிதம்பரனார் இளைஞர் அணியினரின் முயற்சியாலும், பொறியாளர் நரேனின் சொந்தச் செலவிலும் புதுப்பிக்கப்பட்டது. மகிழ்ச்சியான செய்தி.
இந்த வளைவு சற்று பராமரிப்பு இல்லாமல் இருந்த 1972 காலகட்டங்களில் நெடுமாறன், தூத்துக்குடி காங்கிரஸ் தலைவர் ஏ.பி.சி.வீரபாகுவுடன் இந்த இடத்திற்கு சென்று வந்தது எல்லாம் நினைவுக்கு வருகின்றன.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், ‘சுதேசி நாவாய்ச் சங்கம்’ என்ற கப்பல் கம்பெனியைத் தொடங்குவதற்கு இதே வாடித்தெருவில் வசித்த முத்தாட்சி அம்மாள் பங்குதாரராய்ச் சேர்ந்து கையெழுத்திட்டது இந்த ஆர்ச்சின் முன்புதான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழில் கையெழுத்திட்ட எம்.சி.வீரபாகு, சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான ஏ.பி.சி.வீரபாகு ஆகியோர் வாழ்ந்ததும் இதே வாடித்தெருவில்தான்.
எம்.சி.வீரபாகுவின் வீட்டில் காந்தியடிகள் இரண்டு முறை தங்கியுள்ளார். வாடித் தெருவில் இருந்த முத்தாட்சி அம்மாள் பள்ளி வளாகத்தில்தான் வ.உ.சிதம்பரனாரின் கப்பல் கம்பெனி சம்பந்தமாகப் பல கூட்டங்கள் நடந்தன. வரலாறாய் வாழும் வாடித்தெரு!
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
15.02.2021

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...