Friday, February 19, 2021

#சுதந்திரத்துக்கு_பின்_இந்தியாவில்_தூக்கிலிடப்படும்_முதல்_பெண்_குற்றவாளி

———————————————————-
நாட்டின் விடுதலைக்கு பின் உத்தரபிரதேசம் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஷப்னம் என்ற பெண் தான் முதன்முறையாக தூக்கிலிடப்படும் பெண் குற்றவாளி ஆவார். நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட்ட மீரட்டைச் சேர்ந்த பவன் ஜலாட் என்பவர்தான் ஷப்னத்தை தூக்கிலிட நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2008-ல் தன் பெற்றோர் உட்பட ஏழு பேரை கொன்றது இவர் தான் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இவருக்கு மாவட்ட நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கியது. அலகாபாத் உயர் நீதிமன்றமும்,உச்சநீதிமன்றமும் இதை உறுதி செய்துள்ளது. குடியரசுத் தலைவரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது.
உத்தரபிரதேசத்தில் மதுராவில் உள்ள பெண்களுக்கான தூக்கிலிடும் சிறையில் தனியறையில் உள்ளார். இந்த சிறை அறை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. தண்டனை நிறைவேற்றப்பட்டால் சுதந்திரத்துக்கு பின், தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளியாக ஷப்னம் இருப்பார்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
18.02.2021

No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh