நம்ம கோவில்பட்டி
நம்ம ஊரு கோவில்பட்டி
Kovilpatti
Ulundurpet
Ulundurpet, Tamil Nadu, India
Chettinad - Ithu Engal Naadu
Chettinad, India
Cholapuram
———————————————————
தொடர்ந்து தமிழகத்தில் பயன்படாத விமான நிலையங்கள் குறித்து 30 ஆண்டுகளுக்கு மேலாக எழுதிவருகிறேன். சென்னைக்கு அருகே சோழாபுரம், உளூந்தூர்பேட்டை, அறந்தாங்கி, செட்டிநாடு, கோவில்பட்டி கயத்தாறு அருகே கடம்பூர் விமான நிலையங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இராண்டாம் உலக போரின் போது நிறுவப்பட்டு எந்தவித பயன்பாடும் இல்லாமல் வீணாக அதை பராமரிக்கும் செலவுகளை செய்கிறோம்.
அதில் விமானப் படைப் பயிற்சி வகுப்பு, விமான பைலட்கள் கற்க தொழிற்கல்லூரிகள், விமானத்தின் கார்கோ சர்வீஸ் வளாகங்கள் என்று அமைக்கலாம் வீணாக இந்த இடங்கள் பயன்பாடு இல்லாமல் இருப்பதை எழுதிவந்தேன். பிரதமர் அமைச்சர் அலுவலகத்திற்கு தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள திட்டங்கள் ஏறத்தாழ 150-க்கும் மேலுள்ள பிரசினைகள் குறித்து எழுதி அனுப்பி இருந்தேன்.
இன்று டெல்லியில் இருந்து ஒரு நல்ல செய்தி கிடைத்தது.மேற்குறிப்பிட்ட ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இரண்டாம் உலகப்போரில் விமானம் வந்து செல்ல இந்த விமான நிலையங்கள் பயன்பாட்டில் இருந்தது. உளூந்தூர்பேட்டை விமான நிலையத்தை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக டெல்லி செய்திகள் கூறுகின்றன. சென்னை ஐஐடி, டிட்கோ போன்றவை இதை குறித்தான ஆய்வை உளூந்தூர்பேட்டையில் நடத்தியுள்ளன. மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இது குறித்தான செயல்பாட்டு திட்டத்தை வகுக்க இருக்கின்றது. ஏறத்தாழ 70-க்கு ஆண்டுகளுக்கு மேலாக இந்த விமான நிலையங்களுக்கு ஒரு விடிவு காலம் கிடைப்பது தமிழ்நாடு வளர்ச்சிக்கு நல்லது.
No comments:
Post a Comment