Friday, February 26, 2021

#புதுச்சேரியில்_இதுவரை_ஆட்சிக்_கவிழ்ந்த_வரலாறு


———————————————————-
புதுவையில் கடந்த 30 (1991 தவிர) வருடங்களுக்கு மேலாக நிலையான ஆட்சி 5 ஆண்டுகள் நிறைவு செய்தாக நினைவு. அதற்கு முன் பருக் மரைக்காயர், டி,ராமச்சந்திரன், ராமசாமி போன்றோர்களின் காலங்களில் 1960,70 களில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை ஆட்சி கவிழ்ந்து உள்ளது. அவை 1969,1974,1977,1980,1985,1991 நிகழ்ந்தன. தற்போது 5 ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற நேரத்தில் காங்கிரஸ் ஆட்சி பிரிவு 356-ன் கீழ் கலைக்கப்பட்டது. புதுச்சேரி காரைக்கால், ஏனாம்(ஆந்திரா அருகே), மாஹி (கேரளா அருகே)என்று இணைந்தது தான் புதுச்சேரி.

புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹி, மேற்கு வங்கத்தின் சந்திரநாகூர் என்பதெல்லாம் பிரெஞ்சு காலணி பிரதேசகளில் இருந்தது. இந்த பகுதிகள் இந்தியாவில் இணையும் பொழுது புதுச்சேரி தனி யூனியன் பிரதேசமாக அமைந்தது. இன்று மத்திய அரசின் யூனியன் பிரதேசமான டெல்லி, அந்தமான் போல புதுச்சேரியும் யூனியன் பிரதேசமாக திகழ்கின்றது. மத்தியில் இந்திரா காந்தி அவசர நிலை ஆட்சித் தோற்றப் பின்பு மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா ஆட்சி 1978 , பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகிய இரு பகுதிகளையும் தமிழகத்தோடு இணைத்து விடலாமென்ற போது பாண்டிச்சேரியே எதிர்த்து கொதித்து எழுந்தது. அதனால் அப்போது மொரார்ஜி தேசாயின் விருப்பம் நிறைவேறாமல் போனது.

1969-ம் ஆண்டு முதல் 73 வரையிலான காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவுடன் திமுக ஆட்சியில் இருந்தது. அப்போது கம்யூனிஸ்ட் தனது ஆதரவை விலக்கியதால் பரூக் மரைக்காயர் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. அதன்பிறகு 1974-ல் அதிமுக ராமசாமி முதல்வராக பதவியேற்றார். அரசுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்வதில் பிரச்சினை பூதாகரமாகி 21 நாளில் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
பின்னர் 1977-ல் எஸ்.காங்கிரஸ் ஆதரவுடன் அதிமுக ராமசாமி முதல்வராக இருந்தார். ஒரு ஆண்டில் அதிமுகவுக்கு அளித்த ஆதரவை எஸ்.காங்கிரஸ் வாபஸ் பெற்றதால் ஆட்சி கவிழ்ந்தது. அதன்பிறகு 1980 வரை கவர்னர் ஆட்சியில் இருந்தது.
தொடர்ந்து 1980 முதல் 83 வரையிலான காலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் திமுக ஆட்சி இருந்தது. டி.ராமச்சந்திரன் முதல்வராக இருந்தார். இரு கட்சிக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே, தனது ஆதரவை காங்கிரஸ் விலக்கியதால் ஆட்சி தானாக கவிழ்ந்தது. 1990-ல் ஜனதாதளம் ஆதரவுடன் திமுக ஆட்சி நடந்தது.. முதல்வராக டி.ராமசந்திரன் இருந்த நிலையில் ஓராண்டில் ஜனதாதளம் தனது ஆதரவை விலக்கியது. இதனால் அவரது ஆட்சி கவிந்தது. 1991 ஜனவரியில் வைத்திலிங்கம் முதல்வராக பதவியேற்றார். தற்போது முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு 2016-ல் பதவியேற்று 4 வருடம் 9 மாத காலத்தை பூர்த்தி செய்திருந்த வேளையில், அக்கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியை இழந்துள்ளது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
24.02.2021

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...