Monday, September 1, 2025

16 august

 திமுகவைப் பொருத்தவரை எதிர்க்கட்சியில் இருந்து யாராவது இணைய வந்தால் வெற்றிலைபாக்கு வைத்து வரவேற்றுக் கொண்டாடுவார்கள்.

அவர்கள் வந்த பின் மாடு போல உழைத்துப் பாடுபட வேண்டும். இப்படி ஆசை காட்டி திமுக உடைக்காத கட்சி என்று எதுவுமே இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளையும் உடைப்பது தான் அவர்கள் வேலைத்திட்டமே! ஒரு இரண்டு நாள் முரசொலியில் இது பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கும். அதற்குப் பிறகு என்னைப் போன்றவர்களை வைத்து கடுமையான வேலை வாங்குவார்கள். அவர்களுக்கு ஆக வேண்டியது நடந்த உடனே கழற்றி விட்டு விடுவார்கள்.
இன்றைய திமுகவின் வேலையே பல கட்சிகளிலிருந்து ஆளைத் தூக்கி கொண்டிருப்பது தான். அங்கு நடக்கும் செயல்களை பார்த்துவிட்டு நம்மைப் போன்ற . சுய கௌரவம் உள்ளவர்கள் விலகிடத் தான் நேர்ந்து விடும். ஒன்று குடும்பத்தினருக்கு அடிமையாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் அங்கு இருக்கலாம். இல்லையென்றால் சரி தவறு என்று வாதமிட்டாலோ கட்சியினுடைய வரலாறு அதனுடைய கொள்கை பண்பாடு பற்றி குறிப்பிட்டாலோ அவர்களால்அவமானப்படுத்தப்பட்டு வெளியேறி விட வேண்டியது தான். அந்த வகையில் இன்றைய ஸ்டாலின் திமுக முழுமையாக கொல்லைப்புறக்கூட்டணிக் கட்சியாக ஆகிவிட்டது.
 


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்