Monday, September 8, 2025

28 August

 2018 க்கு முன் சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கள் நியமனத்தில் மாநில அரசுகள் எனக்கென்னன்னு இருந்தன .

2006-ல் பிரகாஷ் சிங் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் 2018-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதில் சட்டம் ஒழுங்கு தலைமை டிஜிபி நியமனம் குறித்த வழிகாட்டுதல்களை உத்தரவாக பிறப்பித்தது.
அதன்படி தலைமை டிஜிபி நியமனத்தில் 30 ஆண்டு பணியாற்றிய சீனியர் ஐ.பி.எஸ் அதிகாரிகள் ( பெரும்பாலும் டிஜிபிக்கள்) பட்டியலை மாநில அரசு யூபிஎஸ்சிக்கு அனுப்பவேண்டும். அப்படி அனுப்பப்படும் லிஸ்ட்டில் உள்ளவர்கள் குறைந்தப்பட்சம் 6 மாதம் சர்வீஸ் உள்ளவர்களாக இருக்கணும். அதில் தகுதியுடைய 3 பேரை யூபிஎஸ்சி (UPSC) தேர்வு செய்து அனுப்பும் அதில் ஒருவரை மாநில அரசு தலைமை டிஜிபியாக (HOPF) நியமிக்கவேண்டும், அவ்வாறு நியமிக்கப்படுபவர்களை அரசே நினைத்தாலும் மாற்ற முடியாது, அடுத்த 2 ஆண்டுகள் அல்லது ஓய்வு பெறும் வரை அவர்தான் தலைமை டிஜிபி. தலைமை டிஜிபிக்கு இணையாக ஒருவரையோ, அல்லது கிரைம் டிஜிபி, அல்லது ஆலோசகர் என எதையும் நியமிக்க கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதுமுதல் அரசின் கைப்பாவையாக விரும்பும் நபரையோ அல்லது ரிட்டையர்டு ஆவதற்கு சில.மணி நேரம் முன்போ டிஜிபி பதவியை நீட்டித்து நியமிக்கும் முறை ஒழிந்தது.
சங்கர் ஜிவால் வரும் வரை முறையாக நடைமுறை இருந்து வந்தது. தற்போது அவர் ஜூன் மாதம் ஓய்வு பெறும் நிலையில் முறையாக 60 வயது ஓய்வு ஆகஸ்ட் என்பதால் நீட்டித்து பின் அவரையே மேலும் ஓராண்டுக்கு டிஜிபியாக நீட்டிக்க விரும்பியது அரசு.
காரணம் அடுத்து தலைமை டிஜிபியாக இவர்கள் நினைக்கும் நபர் வர முடியாது என்பதாலும் வருபவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு வருவார்களோ என்கிற எண்ணத்தாலும் நீட்டிக்கலாம் என்று நினைத்து அதற்கு மத்திய அரசு அனுமதி தராது விதியிலும் இடமில்லை என்பதால் வேறு ஒரு முயற்சியை எடுத்துள்ளனர்.
பட்டியல் அனுப்பினால் தானே லிஸ்ட் வரும் அனுப்பாமலேயே தாமதப்படுத்தினால். அதையே சாக்காக வைத்து தற்காலிக டிஜிபியாக ( அப்படி சட்டத்தில் இடமே இல்லை, ஆனால் பஞ்சாப் , உபி போன்ற மாநிலங்கள் விதியை மீறியுள்ளது உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்காக உள்ளது) ஜூனியரான வெங்கட்ராமனை நியமிக்க உள்ளதாக தகவல் வருகிறது.
அப்படி நியமித்தால் இவர்கள் தெரிந்தே வேண்டுமென்றே,நீதிமன்ற அவதூறு வழக்கு வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்றே இதை செய்கிறார்கள். காரணம் இதுபோன்ற பொறுப்பு டிஜிபி நியமிக்கிறார்கள் என்று வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை எஸ்.எம்.சுப்ரமணியம் அமர்வு கேள்வி எழுப்பியபோது அப்படி எல்லாம் இல்லை, முறைப்படி தேர்வுக்கான நடைமுறைகள் நடந்து வருகிறது என அரசு தரப்பு தெரிவித்ததால் அதை ஏற்று மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.
ஆனால் நீதிமன்றத்தில் சொன்னதற்கு மாறாக யூபிஎஸ்சிக்கு பட்டியலையும் அனுப்பாமல் பின் வாசல் வழியாக டிஜிபி நியமனத்தையும் செய்வது நீதிமன்றத்தை சாலஞ்ச் செய்யும் செயல்.
யார் டிஜிபியாக வந்தாலும் அரசின் சொல்படித்தான் நடக்க போகிறார்கள். ஆனால் இந்தியாவில் இரண்டு மாநிலங்கள் சட்டத்தை மீறி டிஜிபி நியமனத்தில் தவறு செய்ததை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு தமிழக அரசு நடக்க யார் வழிகாட்டுவது? அதிகாரிகளுக்கு இது தெரியாதா? தெரிந்தும் இப்படி தவறுக்கு துணைபோய் இந்த அரசை நீதிமன்றத்தில் அவமானம் அடையும் நடவடிக்கையில் ஈடுபட எப்படி தைரியம் வருகிறது?
HOPF சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவதூறு வழக்கு நானே தொடர்வேன்…

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்