Monday, September 8, 2025

20 August

 #துணைக்குடியரசுத்தலைவர்தேர்தல்

—————————————————————————
பாரதிய ஜனதாக் கூட்டணி அரசு
சி பி ராதாகிருஷ்ணனை துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்தல் போட்டியில் நிறுத்தி இருக்கிறது. வீம்புக்காக இந்த இன்டி கூட்டணி தம்மளவில் தமிழக எம்பிகளின் வாக்கு அதே தமிழரான சிபி ராதாகிருஷ்ணனுக்கு செல்லக்கூடாது என்பதற்காக எப்படி இரண்டாவது முறை ஜனாதிபதித் தேர்தலில் அப்துல் கலாமை புறக்கணித்தார்களோ இந்தப் போட்டியில் தென்னகத்தை சேர்ந்தவரை நிறுத்தி இருக்கிறோம். அவருக்கு தான் நாங்கள் வாக்களிப்போம்! தோற்றாலும் பரவாயில்லை ஒரு காலத்தில் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது ஆந்திராவின் என்டி ராமராவை மனபிட்ட என்ற வகையிலும் ஆந்திராவின் மண்ணின் மைந்தர் என்ற வகையிலும் ஆதரித்ததும் உண்டு. அப்போது எதிரும் புதிருமாக காங்கிரஸ் இருந்த காலம். இங்கே இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் திராவிட நாடு என்பார்கள் தமிழர் என்பார்கள் திராவிட மாடல் ஆட்சி என்பார்கள். இந்த பொய் வேசக்காரர்கள் நிச்சயமாக சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் என்று தெரிந்தும் வீம்பிற்காக தெற்கே இருந்து நிப்பாட்டுவது தான் இவர்களுடைய குறுக்குச்சால் ஓட்டும் காலகாலமான கோணல் புத்தி என்பதாக இருக்கிறது.
மோசமான சிந்தனைகளையும் செயல்களையும் கொண்டவர்கள் இவர்கள் வெறும் வாயாலே மேடைகளிலும் மைக்குகளிலும் முழங்கிக் காலத்தை ஓட்டுபவர்களைப் பற்றி என்ன சொல்ல இருக்கிறது. 1999 மக்களவை தேர்தலின்போது கோயமுத்தூர் தோகுதியில் கூட்டணி கட்சியான பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து நல்லக்கண்ணுவை தேர்க்கடிக்கச் செய்தார்கள். அப்போது இவர் ஆர்.எஸ்.எஸ். இல்லையா? அப்போது மட்டும் தமிழகத்திற்கு என்ன செய்து கிழித்திருந்தார்.
ஆனா பாருங்க இதே ஆர் எஸ் எஸ் பின்னணியைக் கொண்ட மு.துணை குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்ய நாயுடுவை வைத்து கருணாநிதி சிலையை திறந்தார்கள். மதுரை திமுக மேயர் முத்து வெற்றிக்கு, மதுரை அன்றைய ஜனசங்கம் இன்றைய பாஜக மறைந்த சேஷாத்திரியிடம் மதுரையில் கலைஞர் வேண்டிய போது 1971இல் உங்கள் கோட்பாடு எங்கள போனது கனிமொழி அவர்களே…..⁉️
இந்த சுதர்சன ரெட்டிதான் போபால் விஷவாயு ரண கொடுமை வழக்கில் காங்கிரசுக்கு சோனியவுக்கு ஆதரவாக தீர்ப்பை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அது ஒரு பக்கம் இருக்க இந்த கனிமொழிக்கும் சு வெங்கடேசனுக்கும் துணை ஜனாதிபதி பிரச்சனையில் என்ன வந்தது ? அது நொள்ளை இது நொள்ளை என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். கனிமொழியின் தகப்பனார் கலைஞர் 1999 முதல் 2004 வரைக்கும் இதே பாரதிய ஜனதா சித்தாந்தத்தைதான் ஆதரித்தார். அதையெல்லாம் நினைத்து கூட பார்க்காமல் இன்றைக்கு கோட்பாட்டுக் கொள்கை பற்றி எல்லாம் கனிமொழி பேசிக்கொண்டு இருக்கிறார். 1968 முதல் இந்த ஒத்தோடிக் கொள்கை திமுகவிற்கு இருந்ததெல்லாம் தெரியாதா. இன்னைக்குக் கோட்பாடு கொள்கை எல்லாம் பேசுகிறவர் அருண் ஜெட்லியோடு நட்பு பாராட்டி அவரிடத்தில் எப்படிமுக்கியத்துவம் பெற்று இருந்தார் என்பதை மறைத்து விடுவாரா. .கோட்பாடு என்பது என்னவாக இருக்கிறது என்பதே தெரியவில்லை இந்த கனிமொழி கம்பெனிக்கு. பாரதிய ஜனதா ஆட்சியில் தானே ஆ ராசா டி ஆர் பாலு முரசொலி மாறன் போன்றவர்கள் மத்திய மந்திரி பதிவியில் இருந்தார்கள். அ ராசா சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார் டி ஆர் பாலு சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தார் முரசொலி மாறன் தொழில்துறை அமைச்சராக இருந்தார். அதையெல்லாம் அனுபவித்து வந்துவிட்டு கோட்பாடு கொள்கையைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். அன்றைய பாஜக அப்துல் கலாமை ஜனாதிபதி ஆக்கும்போது நீங்கள் ஆதரவாக வாக்களித்தீர்கள் தானே. அதேபோலத் தானே சி பி ராதாகிருஷ்ணன் ஒரு தமிழ்நாட்டு காரராக இருந்து துணை ஜனாதிபதி போட்டியில் நிற்கும்போது ஆதரிக்க வேண்டியதுதானே ஒரு சரியான நிலைப்பாடு.அதில்என்ன உங்களுக்கு பிரச்சனை. கோட்பாடு கோட்பாடு வெறும் கூச்சல். இந்த சு வெங்கடேசனுக்கு என்ன தெரியும் முதலில் முல்லை பெரியார் பிரச்சினையைப் போய் அவருடைய சேட்டன் மாரிடம் பேசி தீர்க்கச் சொல்லுங்கள். பேசுவாரா?முல்லைப் பெரியாறு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்குமுரிய மொத்த பிரச்சனைகளையும் பேசி நல்லவிதமாகத்தீர்க்கச் சொல்லுங்கள் பார்ப்போம். அதற்குப் பிறகு வந்து ஊர் நியாயங்களை பேசட்டும். மதுரை மாவட்டத்தின் நாடாளுமன்றப் பிரதிநிதி தானே அவர். முல்லைப் பெரியாறு கண்ணகி கோவில் விவகாரம் அங்கு விவசாய நிலங்களில் வந்து குப்பைகளையும் கழிவுகளையும் கொட்டும் விவகாரங்களை எல்லாம் பேசி தீர்க்க சொல்லுங்கள்.
நான் கேட்கிறேன் ஆழியாறு பரம்பிக்குளம் திட்டத்தின் நினைவை போற்றும் வகையில் பழனிச்சாமி கவுண்டர் சி சுப்பிரமணியம் பொள்ளாச்சி மகாலிங்கம் காமராஜர் போன்றோருக்கு சிலை வைத்தார்களே இந்த திட்டத்திற்கு மிக முக்கியமாகக் கடும்பாடு பட்டு உழைத்த குறிப்பாக அன்றைய கேரள முதல்வர் நம்பூதிரி பாட் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த திட்டத்திற்கு அனுமதி பெற்று வந்த பி ராமமூர்த்தி அவர்களுக்கு ஏன் சிலை வைக்கவில்லை. அதைப்பற்றி இந்த சு வெங்கடேசன் ஏன் வாயைத் திறக்க மாட்டேன் என்கிறார். இன்றைக்குத் தோழமைக் கட்சி தானே அந்த காம்ரேட் பி ராமமூர்த்தியை ஏன் மறந்து விட்டார்கள். திமுகவிடம் ஏன் அவரின் சிலையை வைக்கவில்லை என்று கேட்க வக்கில்லை. கோட்பாடு கொள்கை மண்ணாங்கட்டி என பேசத் தெரிகிறது. உரிமைகளை அடகு வைத்துவிட்டு கூட்டணிக்குக் கோவிந்தா போடுவது

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்