Monday, September 1, 2025

#சோனியாகாந்திஇந்தியக்குடியுரிமை பெறாமலே பிரதமர் இல்லத்தில் பல வருடங்கள் தங்கியிருந்த விவகாரத்தை நான் பலமுறை சொல்லி வந்துள்ளேன்.

 #சோனியாகாந்திஇந்தியக்குடியுரிமை பெறாமலே பிரதமர் இல்லத்தில் பல வருடங்கள் தங்கியிருந்த விவகாரத்தை நான் பலமுறை சொல்லி வந்துள்ளேன். இதுகுறித்து குல்தீப் நையார் 1980 வாக்கில் அதாவது 40 ஆண்டுகளுக்கு முன்பே சண்டே ஆங்கில வார இதழில் சோனியா காந்தியின் இந்திய இருப்பு குறித்துக் கடுமையாக விமர்சனம் செய்து எழுதியிருந்தார். தேவராஜ் அர்ஸ் அவரிடம் இது குறித்து இந்திரா காந்தி அவர்களே மன வருத்தப்பட்டதாக ஒரு தகவலும் இருக்கிறது. இந்த விஷயத்தை நெடுமாறன் அவர்கள் அறிந்து பிறகு அவரே என்னிடம் சொன்னதுண்டு. . இவ்வளவு எல்லாம் பிரச்சனைகள் இருக்க நான் இந்தியன் என்று சோனியா காந்தி கொடிபிடிப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. ராஜீவ் காந்தி அரசியலுக்கு வந்த பிறகுதான் இந்திய சிட்டிசன் உரிமை பெற்று சோனியா காந்தி அரசியல் காட்சிக்கே வருகிறார். வந்தது மட்டுமல்ல அக்காலங்களில் இந்திரா காந்திக்கு சோனியா காந்தி எவ்வளவு நெருக்கடிகளைக் கொடுத்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அவரது இளைய மருமகளான மேனகா காந்தி கூட சோனியா காந்தியின் நிர்பந்த நெருக்கடியில் தான் குடும்பத்தை விட்டு தன் குழந்தையுடன் நள்ளிரவில் வெளியேற்றப்பட்டார். அக்காலத்தில் எல்லாம் தெரிந்த இந்திரா காந்தி என்ன இருந்தாலும் தனது மருமகள் என்று சோனியாவின் நிர்பந்தங்கள்பலவற்றையும் பொறுத்துக் கொண்டதை நாடறியும்! . நானும் இந்தியன் தான் என்று இன்று கொடி பிடிக்கிறார் சோனியா! என்னத்தைச் சொல்ல!

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்