தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் அண்ணன் #மகாதேவன்பிள்னையின் நூற்றாண்டு
கன்னியாகுமரி மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் இருந்த மரியாதைக்குரிய அண்ணன் மகாதேவன் பிள்ள அவர்களது நூற்றாண்டு விழாவை நாகர்கோவிலில் அமைதியாகக் கொண்டாடுகிறார்கள். அண்ணன் மகாதேவன் பிள்ளை அவர்கள் பெருந்தலைவர் காமராஜரோடு கன்னியாகுமரிக் கடற்கரையில் அவருடன் பேசிக்கொண்டே நடைப்பயிற்சி செய்தவர். அதேபோல் காமராஜர் இடைத்தேர்தவில் நின்ற போது அவர் மற்றும் ஏபிசி வீரபாகு பழ நெடுமாறன் (அப்போது காங்கிரஸ் இருந்தார்) அவரும் கோ.முத்து கருப்பன் போன்றோரும் காமராஜருக்காகத் தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள். சில முக்கியமான வேலைத் திட்டங்களை இவர்களிடம் தான் பெருந்தலைவர் கொடுப்பார். இன்றைக்கு மகாதேவன் பிள்ளைஅவர்களது நூற்றாண்டு விழா! பாரம்பரியக் காங்கிரஸ் என்று சொல்லிக் கொள்பர்கள் தமிழ்நாடு அளவில் அதைக் கொண்டாடி இருக்க வேண்டும். தவற விட்டு இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment