Wednesday, March 2, 2016

குற்றால மலைக்கு ஆப்பு வைக்கிறது ராம்கோ சிமெண்ட் நிறுவனம்!

இனி தென்காசிப் பகுதிகளில் தென்றல் காற்று வீசப்போவதில்லை. மாறாக, நச்சுக் காற்று தான் வீசப்போகிறது. ஆமாம், சுரண்டை - செங்கோட்டை மெயின்ரோடு மங்கம்மா சாலை அருகே ராம்கோ சிமெண்ட் நிறுவனம், தனது சிமெண்ட் தொழிற்சாலையை நிறுவ திட்டமிட்டுள்ளது. சிமெண்ட் தொழிற்சாலையிலிருந்து வரும் தூசுக்கள் மற்றும் ரசாயனக் கலவைகள் காற்றின் மூலமாக விவசாய நிலங்களில் படிந்து பயிர் விளைச்சலை பாதிப்புக்குள்ளாக்குவது மட்டுமில்லாமல், குற்றால மலைக்கு இது பெரும் கேடுவிளைவிக்கக்கூடியதாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் அந்த தூய்மையற்ற காற்றை சுவாசிப்பதினால் பல்வேறு உடல்நலக்கோளாறுகள் ஏற்படக்கூடும் என ஏற்கெனவே ஆய்க்குடி, சிவராமபேட்டை, கொடிக்குறிச்சி, தேசிய நகர் கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதற்காக அக்கிராம மக்கள் வரும் 28-ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளனர்.

ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தை அடித்து விரட்டுவோம். சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம். இதை அனைவரும் Share செய்து, அந்த அறவேக்காடு ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல உதவுங்கள்.ஏற்கனவே இந்த பகுதிகளில் பல குடோன்கள் நிறுவப்பட்டு அந்த குடோன்களுக்கு அருகே சென்று பாருங்கள் அந்த காற்றில் உள்ள சிமெண்டால் சுவாசிக்க முடியாமல் செல்வோர் படும் பாட்டை பக்க்த்து நிலங்களின் நிலையை குளோரின் மூல சுகாதாரக்கேடு இப்படி என்றால் ஆலை என்றால் நிலை ...

இது புரளியாக இருந்தால் தவிர்த்துவிடலாம் ஆனால் இப்படி ஒரு எண்ணம் ஆலை நிறுவனத்திற்கிருந்தால் தயவு செய்து எண்ணத்தை மாற்றுங்கள் எங்கள் பகுதியின் வளத்தை காக்க.....

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...