Wednesday, March 2, 2016

முல்லைப் பெரியாறு

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கேரள அரசின் சிறப்புக் காவல்படை காவல்நிலையம் அமைத்தபின் அங்கு பணியாற்றிய தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் பணியிட மாறுதல் தொடர்ந்து பெற்று செல்கின்றனர். இதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. இந்த அணையின் பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படை அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த எதிர்ப்பை மீறியும் அணை பக்கத்திலேயே கேரள அரசு சிறப்பு காவல் படையின் காவல் நிலையத்தை அமைத்துள்ளது. இங்கு கேரளா காவல்துறையை சேர்ந்த ஒரு உதவி ஆய்வாளர், 25 காவலர்கள் பணியாற்றுகின்றனர். இது அவசியமற்றது. தேவையற்ற பீதியை கேரளா தொடர்ந்து கிளப்பி வருவது தொடர்ச்சியாக முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் இருந்து வருகிறது. பேபி அணையை பலப்படுத்தி பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடி வரை உயர்த்த தமிழக அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுக்கவே கேரள அரசு இந்த காவல் நிலையத்தை தேவை இல்லாமல் அமைத்துள்ளது.

இப்படியான நிலையில் கடந்த ஜனவரியிலிருந்து அதிகாரிகள் பணியிட மாற்றத்தில் செல்வது தமிழக உரிமைக்கு உகந்ததல்ல. இந்த காவல்நிலையம் அமைக்கப்பட்ட பிறகு அதிகாரிகள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தப்பட்டு அணைப் பக்கம் செல்வதற்கும் தயங்குகின்றனர். அங்கு இரவில் தங்குவதும் கிடையாது. சிறுக சிறுக கேரளா கண்ணகி கோவிலைப் போல பெரியாறு அணையையும் தன் வசம் கைப் பற்றிட இம்மாதிரி அத்துமீறி நடந்துகொள்கிறது. இந்த நிகழ்வுகள் சமீபகாலமாக நடப்பது தேனி மாவட்ட விவசாயிகளுக்கு வேதனையைத் தருகிறது. 

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...