Tuesday, February 3, 2015

விவசாய நிலங்கள் விலைக்கு வாங்கப்பட்டதா? . விவசாயிகள் பிரச்சனை -1

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், மேல் மருதூர் கிராமத்தில் 1200 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த ஆலையின் அருகிலே தனியார் சிமெண்ட் உற்பத்தி செய்யும் ஆலை அமைக்க முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது. 50 ஏக்கர் வரை விவசாய நிலங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

கருத்து கேட்பு கூட்டம் என்று ஒப்புக்கு ஒன்று வைத்து தங்கள் பணிகளை வேகமாக அந்த நிறுவனத்தினர் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் சிமெண்ட் ஆலையில் விவசாயமும் குடிநீரும் பாதிக்கப்பட்டு 1986-ல் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கின் காரணமாக ஓரளவு நிவாரணம் மட்டுமே கிடைத்தது. வனம் பார்த்த கரிசல் பூமி திரும்ப இன்னொரு சிமெண்ட் ஆலையா என்று விவசாயிகள் கவலையாக உள்ளனர்.


No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...