Tuesday, February 3, 2015

கிணற்று நீர் பற்றி திரு.ச.ராஜகுமாரன்


தமிழ் இந்துவில், 23.11.2014 அன்று கிணற்று நீரை பற்றி திரு.ச.ராஜகுமாரன் எழுதிய பத்தியை பார்த்தேன். கிராமங்களில் மட்டுமில்லாமல் நகரங்களிலும் வீட்டில் பின்புறம் கிணறும், முன்புறம் திண்ணையும் இருக்கும். முன்புறம் ஆண்கள் ராஜ்யமாகவும், பின்புறம் பெண்கள் ராஜ்யமாகவும் இருந்த காலங்கள் உண்டு. விடியலில் தண்ணீர் இறைக்கும் போது அதில் வரும் ஓசையும் தூக்கத்தில் இருபவரை எழுப்பவும் செய்யும். 

முறுக்கிய கொச்சை கயிறு இரும்பில் வெள்ளை மூலம் பூசிய வாளியில் பெண்களும், ஆண்களும் கிணற்றில் இருந்து நீர் இறைப்பது உடற்பயிற்சியும் நல்ல தேக ஆரோகியத்திற்கு உகந்ததாக இருந்தது. அதுமட்டுமின்றி ஒரு கிராமத்தில் ஓரிரு குடிநீர் கிணறுகளும் இருக்கும். இந்த கிணற்றடியில் பெண்கள் பேசும் கிசுகிசுகள் அக்காலத்தில் பரபரப்பு செய்திகளாக இருக்கும். கிராமப்புறங்களில் விவசாய நிலங்களுக்கு அருகே கிணறு வெட்டி பம்பு செட்டில் குளிப்பதும் தனி மகிழ்ச்சி. 

அதே கிணற்றில் நீச்சல் அடிப்பதும், குளிப்பதும் வேடிக்கையான பொழுதுபோக்கு. விவசாயத்திற்கு பயன்படும் கிணற்றுக்கு பக்கத்திலே பாழ் (எ) பாடு கிணறு என்று நீர் நிரம்பாத குட்டைகள் இருக்கும். விடியலில் வீட்டு புறங்களிலும், குடி நீர் கிணற்றில் நீர் எடுக்கும் போது பேச்சுக்கள் இருக்கும், மலையில் 6 மணிக்கு மேல தண்ணீர் எடுப்பார்கள், தனியாக தான் நீர் இரைப்பார்கள் அப்போது கேட்ட பாடல்கள் ரசிப்பதற்க்கு உகந்தாக இருக்கும். 

அந்த மாலை பொழுதின் மயக்கத்தில் கேட்ட பாடல்கள் குறிப்பாக "ரோஜா மலரே ராஜகுமாரி", "மலர்ந்தும் மலராத", "அமைதியான நதியினிலே ஓடும்", "ஒன்று எங்கள் ஜாதியே", என்ற பல பாடல்கள் 1960 களில் கேட்க கூடிய வாய்ப்புகள் கிடைத்தன. இவையாவும் அக்கால மலரும் நினைவுகள். கால ஓட்டத்தில் பழமைகள் மாறினாலும் நினைவுகள் மட்டும் நமக்கு சீதனமாக மனதில் அசை போடுகின்றது.

1 comment:

  1. அருமையான நிகழ்வுகள் ..எனக்கு தெரிய அம்பாசமுத்திரம் பகுதியில் அக்ரகாரம் இப்படி தான் இருந்தது

    ReplyDelete

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...