Thursday, February 19, 2015

திரிபுரா



February 17 · தமிழ் இந்து நாளிதழில் திரிபுரா மாநிலத்தைப் பற்றி பா.அசோக் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். ஆதியில் கிராத்தேஷ் என்று அழைக்கப்பட்டது தான் திரிபுரா மாநிலம். வடகிழக்கு மாநிலங்களை அறியவேண்டுமென்று சில ஆண்டுகளுக்கு முன் அங்கே செல்ல வாய்ப்புகிடைத்தது.
வங்க மொழியில் எழுதப்பட்ட ராஜமாலா என்ற வரலாற்று நூலில் லுனார் வம்சத்தைச் சேர்ந்த 149மன்னர்களைப் பற்றி தரவுகள் உள்ளன. அரசர்கள் 145லிரிந்து 149வரை இந்தப்பகுதி மாணிக்ய வம்சம் ஆட்சியின்கீழ் இருந்தது.
இந்தமாநிலத்தின் எல்லை மேற்கு வடக்கு மற்றும் தெற்கில் வங்கதேசமும், வடகிழக்கில் அஸ்ஸாமும், கிழக்கில் மிசோரமும் உள்ளன. இங்கு பலமொழிகள் பேசப்படுகின்றன.
நெல், உருளைக்கிழங்கு, கரும்பு, ரப்பர், தேயிலை, பருப்புவகைகள் விளைகின்றன. பச்சைப்பசேலென்று தண்ணீர் ஓடுகின்ற ஆறுகளோடு, திரிபுராவின் இயற்கை நம்மை ஈர்க்கின்றது. இங்கு மின்தடை என்பதே வழக்கில் இல்லை. பூர்வகுடிகள் அதிகம் வசிக்கின்றார்கள். வங்காளிகள் இங்கு வந்து வணிகமும், தொழில்களும் நடத்துகிறார்கள். இரபீந்திரநாத் தாகூரை ஈர்த்த மண் திரிபுரா. குறையில்லாத அப்பாவி மனிதர்கள்.
போட்டிகள், பொறாமைகள் நிறைந்த உலகத்தைவிட்டு விலகி, அமைதியான பிரதேசத்திற்குச் செல்லவேண்டுமென்றால் பொருத்தமான இடம். தமிழர்களின் ஐவகை நிலங்களான குறிஞ்சி நிலத்தைச் சார்ந்ததுதான் இந்த திரிபுரா மாநிலம்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...