Wednesday, February 11, 2015

நீதிபதி கட்ஜூ நீதித்துறை பற்றி எழுதியிருக்கும் கருத்துக்கள்.

It is debatable issue...



நேற்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா (10-02-2015) ஏட்டில்
தலையங்கப் பக்க பத்தியில், நீதிபதி கட்ஜூ நீதித்துறை பற்றி எழுதியிருக்கும் கருத்துக்கள் யாவும் விவாதத்திற்குரியது.

ஜனநாயகத்தில் நீதிபதிகள் மீது விமர்சனங்களையோ, கருத்துக்களையோ வைக்கும்போது நீதிமன்ற அவமதிப்பு என்ற பயம் இருக்கின்றது என்று கட்ஜூ கூறியுள்ளார். இவ்வாறான விமர்சனங்கள் குற்றங்களாகாது என்றும் அழுத்தமாக அவர் கூறியுள்ளார்.

 ஜனநாயக நாட்டில் இறையாண்மை என்பது மக்களிடம் தான் இருக்கின்றது. நாடாளுமன்றம் / சட்டமன்றம், ஆட்சியாளர்கள், நீதித்துறை, அரசு மற்றும் நிர்வாகத்திற்கு   எந்தவிதமான இறையாண்மையும் கிடையாது.

 நீதித்துறையும், நீதிபதிகளும், சட்டத்தின் ஆட்சியினை நிலைநிறுத்தி மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் தலையாயப் பணியாகக் கொண்டவர்கள்.

மக்களாட்சியில் மக்களுக்காக பணியாற்ற வேண்டியவர்கள்தான் நீதிபதிகள். இன்றைக்கு நீதித்துறையின் மீது, விரல்நீட்டி குற்றச்சாட்டுகளை அடுக்குகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
இவ்வாறான நிலையில் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் நீதிபதிகள் மீது வைப்பதில் தவறில்லை.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...