Thursday, February 19, 2015

விவசாயிகள் தற்கொலை குறித்த விபரங்கள் தாருங்கள் விவசாய சொந்தங்களே!

விவசாயிகள் தற்கொலை குறித்த விபரங்கள் தாருங்கள் விவசாய சொந்தங்களே! தேசிய மனித உரிமை ஆணையத்தில் தொடங்கவிருக்கும் வழக்கிற்காக..
_________________________________________________________________

தேசிய மனித உரிமை ஆணையம், தன்னிச்சையாக, மஹராஷ்ட்ர மாநிலத்தில் நடந்த 2,731விவசாயிகள் தற்கொலைகள் குறித்து முழுமையான அறிக்கையை கேட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தேசிய மனித உரிமை ஆணையம் இந்த தற்கொலைகள் உண்மையென்றால், மிகவும் கவலை தருகின்ற விஷயம் மட்டுமல்லாமல், மனித உரிமைகளை மீறுகின்ற செயல் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், தகவல் அறியும் சட்டத்தின்படி மகராஷ்ட்ராவில் 5,698 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர் என்று அந்த மாநிலஅரசு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குச் சரியான நஷ்டஈடும், அவர்கள் வாழ்க்கைநிலையை புணரமைக்கவும் அரசு எவ்விதமான திட்டங்களையும் தீட்டவில்லை என்பதையும் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்கும் என்று தெரிகின்றது.

கடந்த நாட்களில் கரிசல் காட்டு விவசாயிகள் பருத்தி, மிளகாய் விலையில்லாமல் வாடுவதும், தஞ்சை காவிரிடெல்டாவில், தண்ணீர் இல்லாமல் ஒருகாலத்தில் சிலர் எலிக்கறியைத் தின்ன முயற்சித்த்தாகவும், அவர்களுக்காக கஞ்சித்தொட்டிகல் திறக்கப்பட்ட செய்திகளும் வந்தன.

தற்போது நடக்கின்ற அ.தி.மு.க ஆட்சியில் 2012வாக்கில் தமிழகத்திலும் 20க்கும் மேலான விவசாயிகள் விவசாயம் பொய்த்து கடன் தொல்லையால், தஞ்சையிலும், நெல்லைமாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் மேல நீலிதநல்லூர், வரகனூர் கிராமத்திலும் மற்றும் பலபகுதிகளிலும் தற்கொலைகள் செய்துகொண்டனர்.

இதுகுறித்து வழக்குகளை தேசிய மனிதஉரிமை ஆணையத்திற்கு எடுத்துச் சொல்லவேண்டுமென்ற திட்டம் உள்ளது. விவசாயிகள் தற்கொலைகள் குறித்த தகவல்கள், ஆவணங்கள் உங்களில் யாரிடமேனும் இருந்தால் எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


ஏற்கனவே மனிதஉரிமை ஆணையத்தில், வீரப்பன் வழக்கின் காரணமாக, கர்நாடக மைசூர் சிறையில் வாடிய நூற்றுக்கணக்கான தமிழர்களை மீட்டது போன்ற பலவழக்குகளை நடத்தியதைப் போன்று, விவசாயிகள் தற்கொலை வழக்கினையும் எடுத்துச் செல்ல எண்ணுகிறேன்.

விவசாய குடும்பத்தில் பிறந்த தகுதியின் காரணமாக தமிழக விவசாயிகளின் தற்கொலைகளையும் நியாயங்கேட்டு டெல்லியில் உள்ள தேசியமனித உரிமை ஆணையத்தின் கதவுகளைத் தட்ட விவசாய சொந்தங்களே எனக்கு உரிய விபரங்களையும் ஆதரவையும் தாருங்கள் அதற்கான முயற்சியை முன்னெடுக்கத் துவங்கிவிட்டேன்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...