Monday, February 16, 2015

“மீண்டும் கெய்ல்”, கொங்கு மண்டல விவசாயிகள் கவலை.




கேரளா கொச்சியிலிருந்து தமிழகத்தில் உள்ள







கோவை திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய தமிழகத்தின் ஏழு மாவட்டங்கள் வழியாக பெங்களூருக்கு எரிவாயு கொண்டுசெல்ல கெய்ல் நிறுவனம் குழாய்கள் பதிக்கும் பணிகளைத் துவக்க ஆரம்பித்திருக்கின்றது.

 விவசாய நிலங்களைப் பாழ்படுத்துகின்ற வகையில், பொக்லைன் இயந்திரங்களை இறக்கி, தென்னை போன்ற விவசாயப் பயிர்களை நாசப்படுத்துகின்ற காரியத்தினை கெய்ல் செய்ய ஆரம்பித்துவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் 25-11-2013 தடையினை நீக்கியது.
விவசாயிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். விரைவில் அதற்கான விசாரணையும் வர இருக்கின்றது. இவ்வாறான நிலைமை இருக்கும் போது, தான்தோன்றித் தனமாக  விவசாயிகளின் தலையில் இடிவிழும் வகையாக திரும்பவும் கெய்ல் பிசாசு கொங்குமண்டலைத்தினை ஆட்டிப்படைக்கின்றது.  

எரிவாயு குழாய் பதிக்க எழுபது அடி நிலம் தான் தேவை. சாலையோரமும் பதிக்கலாம். ஆனால், கெய்ல் நிர்வாகம் விவசாய நிலங்களையே கண்வைத்து பதிக்க நினைக்கிறது. இதனால் ஐநூறு மீட்டர் தூரம்வரை கிணறு, குளங்கள் போன்ற நீர்நிலைகள், கல்லூரிகள் வீடுகள் போன்ற பலவும் பாதிக்கக்கூடிய வகையில் கெய்ல் நிறுவனம் எரிவாயுக் குழாய்களை பதிக்க முனைப்புகாட்டி வருகின்றது.



அரசுப்பரிவாரங்களிலுள்ள சிவப்பு நாடாக்களும் விவசாயிகளுடைய கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் இருப்பதும் வேதனையான விஷயம். ஒடுக்கபட்ட விவசாயி வீறுகொண்டு எழுந்தால், ஆட்சியாளர் ஒருநாளும் நிம்மதியாக இருக்கமுடியாது.


திரும்பவும் 1980களில் விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு  தலைமையில் நடந்த கட்டைவண்டி சாலைத் தடுப்பு போராட்டங்களை நடத்தினால் தான் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் ஆட்சியாளர்க்கு உரைக்குமென்றால் அந்த பானியிலும் விவசாயி போராட ஆரம்பித்துவிடுவான். விவசாயிகளின் எச்சரிக்கையை புரிந்துகொள்ளவில்லை என்றால் விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...