Tuesday, February 10, 2015

தலைவர் கலைஞர் ஆட்சியில் திட்டமிடப்பட்ட செய்யூர் அனல்மின் நிலையம் தனியாருக்கா?



காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் 25ஆயிரம்கோடி முதலீட்டில் 4000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் புதிய அனல்மின் நிலையம் திமுக ஆட்சியில் தலைவர். கலைஞர் அவர்கள் முயற்சியில் கொண்டுவரப்பட்டது.


இத்திட்டத்துக்கு 2500ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்தி தலைவர் கலைஞர் ஆட்சியில் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த அனல்மின் நிலையத்தை அதானி மின் நிறுவனம், சி.எல்.பி இந்தியா, ஜிண்டல் ஸ்டீல் அண்ட் பவர், ஸ்டெர்லைட் எனர்ஜி, டாடா பவர், தேசிய அனல்மின் நிறுவனம் ஆகியவை கண்வைத்துக் கொண்டு கைப்பற்ற நினைத்தது.
செய்யூர் அனல்மின் நிலையம்.
மத்திய அரசும் செய்யூர் அனல்மின்நிலையத்தை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்துவிட்டது. அதற்காக, சட்டங்களில் சில விதிகளைத் திருத்த மத்தியஅரசு தீர்மானித்துள்ளது. அதன்படி அனல்மின்நிலையத்தினை தனியார் இயக்கி 30ஆண்டுகளுக்குப் பின் அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென்று விதி இருக்கின்றது. அதை திருத்த வேண்டுமென்று பசையுள்ள தனியார் தொழிலதிபர்கள் கறாராகக் கேட்டதற்கு மத்திய அரசும் பணிந்து விட்டது. இதற்காக பிரத்யுஷா சின்ஹா தலைமையில் நடந்த கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகளையும் மத்திய அரசும் ஏற்றுக்கொண்டது.


இதேபோன்று தூத்துகுடி மாவட்டம், உடன்குடி மின் திட்டத்திற்கும் 10ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 660மெகாவாட்  கொண்ட இரண்டு அலகுகளையும் தனியாருக்கு கொடுக்கப் போவதாகவும் செய்திகள் வந்துள்ளன. சீனாவின் பொறியியல் கட்டுமானக் குழுவான “டிரிஷே”  இதை அமைக்க முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசு வாய்மூடியாக இருப்பதற்கு காரணம் என்ன?

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...