*உத்தமர் காந்தியை கொண்டாடும் ஈழத் தமிழர்களும், ஈழம் குறித்து இந்தியாவில் எதிர்வினை ஆற்றுபவர்கள் பார்வைக்கு.*
-------------------------------------
உத்தமர் காந்தியின் பிறந்தநாளை ஈழத்தில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் காந்தி சிலைக்கு இன்றைக்கு அங்குள்ள தமிழ் சகோதரர்கள் மாலை சூட்டி கொண்டாடியுள்ளனர். காலையில் தொலைபேசியில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் தொலைபேசியில் பேசும்போது குறிப்பிட்டார்.
ஈழத் தமிழர்கள் அண்ணல் காந்தியை தங்களுடைய நாட்டின் நாட்டின் தந்தை என்றே மனதளவில் வணங்குகின்றனர். இந்தளவில் சிங்களத் தலைவர்களை ஒருகாலும் இந்தளவில் ஈழத்தமிழர்கள் ஏற்றுக்கொண்டதில்லை. யாழ்ப்பாணத்திற்கு நவம்பர் 1927இல் சென்றிருந்தார்.
செல்வநாயகத்தை ஈழத்து காந்தி என்று அழைப்பார்கள்.பண்டித நேரு காலத்தில் சீனப் போர் நடந்தபோது செல்வா அவர்கள் தமிழரிடம் நிதி திரட்டி அன்றைய பிரதமர் நேருவுக்கு போர் நிதியாக அனுப்பினார். அந்த நிகழ்வு வீரசிங்கம் அரங்கில் நடந்தது. அப்போது செல்வா உரையாற்றிய போது சீனாவை கடுமையாக கண்டித்தும், தனது தாய் நாட்டை ஒருநாளும் ஆக்கிரமிக்க முடியாது என்றார். நாங்கள் இலங்கையிலிருந்து எச்சரிக்கை விடுக்கின்றோம் என்றும் கூறினார்.
இந்திரா காந்தி காலத்தில் வங்கதேச உதயத்திற்கு நடந்த போரில் தமிழர்கள் பிரதமர் இந்திராவுக்கு போர் நிதியாக நிதி பணம் திரட்டி அனுப்பினார்கள். வங்கதேசப் போரில் இலங்கை பிரதமர் பண்டாரநாய்கா பாகிஸ்தான் போர் விமானங்களை கொழும்புவில் தரையிறங்கவும், எரிபொருள் நிரப்பவும் உதவ அனுமதித்தார் என்பதையும் மறுக்க முடியாது. இவையெல்லாம் வரலாற்று நிகழ்வுகள்.
ஆனால் இன்றைக்கு உத்தமர் காந்தியை கொண்டாடுகிறார்கள் ஈழத்தை விரோதமாக பேசுபவர்கள் பார்க்க வேண்டும். ராஜீவ் கொலையில் விடுதலைப்புலிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று 1991 முதல் தொடர்ந்து நான் ஆதாரத்துடன் சொல்லி வருகிறேன். அந்த சம்பவம் நடந்த காலம் முதல் எழுப்பி வருகிறேன். இந்த வினாக்களுக்க விடையும் தெரியவில்லை.
#EElam
#ஈழத்தமிழர்கள்
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
02/10/2019
No comments:
Post a Comment