Tuesday, October 8, 2019

இலங்கை அதிபர் தேர்தல்.

இலங்கை அதிபர் தேர்தல்
நேற்று இலங்கை அதிபர் தேர்தலில் நண்பர் எம்.கே. சிவாஜிலிங்கமும் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். இதுவரை 35 பேர் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள். இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபயேவை எதிர்த்து பிரேமதாசாவின் சஜீத் பிரேமதாசா போட்டியிடுகிறார். இவருக்கு ரணில் விக்கிரமசிங்கே ஆதரவுண்டு. வரும் டிசம்பரில் மைத்ரிபால சிறிசேனேவின் காலம் அங்கே முடிகிறது. நவம்பர் 16ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. அதிபர் பதவிக்கு இரண்டு முறைக்கு மேல் போட்டியிட விதியில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சி கோத்தபயேவுக்கு எதிராக உள்ளது. தமிழர்களுடைய ஆதரவை ஒவ்வொரு சிங்களவரும் ஒவ்வொரு சிங்களவரும் தமிழர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தமிழினத்தை அழிக்கக் கூடிய நடவடிக்கைகள் தான் இன்றைக்கு மைத்ரி, ரணில்வரை நன்றியற்ற செயல்பாடுகளை காட்டியுள்ளனர். அனுராகுமார திசநாயவும் களத்தில் இருக்கின்றார். கோத்தபயே வெற்றி பெற வேண்டுமென்று வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்ணேஸ்வரனும் ஆதரவளித்துள்ளார்.

சஜீத் உடைய செல்வாக்கு பெருகி வருவதாக தகவல். சஜீத் இதுவரை ஊழல், தமிழர்களை அழித்த ரத்தக்கரை படாத இளம் ஜனாதிபதி என்ற கருத்தும் ஒரு பக்கத்தில் இருக்கிறது. யார் வந்தாலும் இதுவரை தமிழருடைய நலனை போற்றவில்லை என்பது தான் இதுவரை நடந்த நிலைப்பாடுகள்.

#இலங்கை_தேர்தல்
#Srilankan_Elections
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
08-10-2019

No comments:

Post a Comment

2023-2024