Thursday, March 5, 2020

தட்டச்சு_இயந்திரங்கள்.

#தட்டச்சு_இயந்திரங்கள்.
————————————-
டெல்லி Connaught Placeல் உள்ள ஆதர்ஷ் தட்டச்சு விற்பனை நிலையம் டெல்லியில் அனைவராலும் உச்சரிக்கப்பட்ட வியாபார நிறுவனமாகும். கடந்த 1979-80 கட்டங்களில்  Portable  தட்டச்சு இயந்திரம் அனைவராலும் ஈர்க்கப்பட்டது. நான் ஒரு Portable தட்டச்சு இயந்திரம் 1979ல் இங்கு தான் வாங்கினேன். அவ்வளவு கூட்டம். பண்டித நேரு, இந்திரா காந்தி, விஜயலட்சுமி பண்டிட், ஜெயபிரகாஷ் நாராயணன், லோகியோ போன்ற  தலைவர்கள் எல்லாம் இங்கிருந்து தட்டச்சு இயந்திரங்கள் வாங்கியதுண்டு.நேற்று அந்த கடைக்கு சென்றபோது உரிமையளார் அகர்வால் இருந்தார். வியாபாரம் இல்லை.ஆனாலும் என் பரம்பரையாக நடத்துகிறேம். இதை விட்டு கடக்க இயலவில்லை என்றார்
கடை அப்படியே உள்ளது ஆனால் வியாபாரம் இல்லாமல் வெறிச்சோடி இருந்ததைப்  பார்க்கும் போது காலச்சக்கர மாற்றங்கள், முன்னேற்றங்கள் வளர்ச்சிகளில் சிலவற்றை திரும்பப் பெற முடியாத நிலைதான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கடையில் எப்போதும் நுகர்வோரும் வாடிக்கையாளரும் ஒரு கட்டத்தில் நிரம்ப இருப்பார்கள். இருந்தாலும் இதெல்லாம் மலரும் நினைவுகளாக உள்ளது.



#டெல்லி
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
04.03.2020#ksrposts



#ksradhakrishnanposts


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...