Friday, April 17, 2020

*வரிசையாக 1720 1820 1920 இப்போது 2020ல் கரானா இதன் மூலம் இயற்க்கை ஏதோ உணர்த்துகிறது*

*வரிசையாக 1720 1820 1920 இப்போது 2020ல் கரானா இதன் மூலம் இயற்க்கை ஏதோ உணர்த்துகிறது*

*உலக ஊரடங்கு இன்று_
மட்டுமல்ல 1720 1820 1920 இப்போது 2020 கரானா
சரியாக நூறு வருடத்துக்கு ஓர் முறை
இயற்க்கையின் மனிதகுலத்துக்கு
எச்சரிக்கை*
————————————
உலகில் 1876ல் ஏற்பட்ட பஞ்சத்தால் நோய் நொடி பட்டினி, தவிட்டை உணவாக தின்றதாக கிராமத்தில் சொல்வார்கள். 



Spanish Flu  நோய்  1920களில் ஏற்பட்டது. பின், முதல் உலகப் போர் (1914-1918), அடுத்து,  இரண்டாம் உலகப் போர்(1939-1945),  மனிதன் ஊரடங்கில் தவித்தான்

இப்போது கரானா. 

கடந்த 1720ல்  பிரான்ஸ்  நாட்டில்
மார்சேயில் ஏற்பட்ட பிளேக் நோயினால் ஒரு லட்சத்திற்கும் மேல் மக்கள் இறந்தனர்.

அதே போல் 1820ல் ஆசியாவில் உண்டான காலரா நோய் பரவி ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

கடந்த 1920ல் பரவிய  Spanish Fluவினால் 100 மில்லியின் மக்கள் உயிரிழந்தனர்.  Spanish Flu தான் இதுவரையில் அதிகம் பேரை பலிகொண்ட தொற்று நோயாக பார்க்கப்படுகிறது. 

2020ல் இப்போது கரானா. இன்றைய தேதி வரையில் 22 லட்சம் மக்கள் உலகம் முழுவதும்  இந்த  நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு, ஒரு லட்சத்து  நாற்பதாயிரம்  பேருக்கு மேலாக உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு 100 வருடத்திற்கு ஒரு முறை இயற்கை நமக்கு ஏதோ எச்சரிக்கை விடுக்கிறது என்பதை நம்புங்கள். 

இந்த கரனோ தொற்று கொடுமையானதாக நாம் கருதுகிறோம்.. இதைவிட பான்டமிக் நோயால் மடிந்தவர்கள் ஏராளம் பல நூற்றாண்டுகளாக இத்தகைய தொற்று நோய்கள் வெவ்வேறு பெயர்களில் உலகையே ஆட்டிப்படைத்திருக்கிறது.. அதில் சில.....

•சார்ஸ் நோய் 2002 முதல் 2003 வரை 
 770 மரணங்கள்
•எபோலா நோய் 2014 முதல் 2016 
11 லட்சத்து  300 மரணங்கள்
•ஸ்வைன் புளு காய்ச்சல் 2009 2010 
2 லட்சம் மரணங்கள்
•காலரா நோய் 1899 முதல் 1923 
10 லட்சம் மரணங்கள்
•ஹாங்காங் புளு காய்ச்சல்  1968 முதல் 1970 
10 லட்சம் மரணங்கள்
•ஏசியன் புளு காய்ச்சல்  1957 முதல் 1958
11 லட்சம் மரணங்கள்
•எச் ஐ வி ( Hiv) 1981. முதல் இன்றுவரை
 25 கோடி மக்கள் 
•ஸ்பானிஸ் புளு காய்ச்சல்  1910 முதல் 1920 4 கோடி மரணங்கள்
•கொரனோ ( Covid19) இப்போதுவரை 1 லட்சத்து 16 ஆயிரம் மரணம் ( இன்னும் தொடரும்)

கிபி  தொடங்கிய காலம்  முதல் இத்தகைய நோய் தொற்றால் உலகெங்கும் கோடி கணக்கில் மனிதர்கள் இறந்துள்ளார்கள். இங்கே கொடுத்திருப்பது இன்றைய நூற்றாண்டு செய்தி மட்டுமே.. இயற்கையை மனிதன் அழிக்கத் தொடங்கிய காலம் முதல் அது நம்மை தண்டித்துக் கொண்டே இருந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், இந்தியாவின் மீது சீனா மற்றும் பாகிஸ்தான் போர்கள் தொடுத்தது, 1975ல் அவசர நிலைக் காலப்  பிரகடனம், 1999 ல் கார்கில் சண்டை, தென்னிந்தியாவை மட்டுமல்ல 2004ல் தென்கிழக்கு ஆசியாவையே புரட்டிப் போட்ட சுனாமி.

தொடர்ச்சியாக மருத்துவர்களுக்கு கொரானா தாக்குதல் ஏற்படுவது நடக்கப்  போகும்  பேரழிவுக்கு ஆரம்பபபுள்ளி எனபதை கவனிக்க வேண்டும்

ஏற்ற இறக்க வெட்டிப் பேச்சுகள், சவடால்கள் எல்லாம் எந்தப் பயனும் தராது. வரலாறு என்பது நம்மை நெறிப்படுத்தி கடந்த கால அனுபவத்தை வைத்து நம்மை பாதுகாப்பதாகும். அதை விட்டுவிட்டு பத்து இருபது ஆண்டுகளை கையில் எடுத்துக் கொண்டு அந்த இசம் இந்த இசம் என்றும்  அவருக்கு நிகர் அவரே என்று பேசுவதை நிறுத்திவிட்டு எதார்த்தத்தை புரிந்துக் கொள்ளுங்கள். இன்றைக்கு அமெரிக்காவின் நிலைமை என்ன? 

இந்தியா பரவாயில்லை கொரானா அறிகுறி தெரிந்தாலே மருத்துவ மனையில் அனுமதித்து  சிகிச்சையை தொடங்கி விடுகிறார்கள்.ஆனா சில வெளி நாடுகளில் கொரானா தொற்று உறுதியான பின் கூட மருத்துவ 
மனையில் சிகிச்சைக்கு அழைத்துச்
செல்ல வழி இல்லை என்று அங்குள்ள
உறவினர்கள்,நண்பர்கள்சொல்கின்றனர்

விஞ்ஞானத்தில் முன்னோடியாக இருந்த அமெரிக்கா இன்று இரவு பகலாக சவப்பெட்டிகளை அடக்கம் செய்ய வேண்டிய துயரமான நிலைமை. சீனா இரும்புத்திரை கம்யூனிச நாடு என்று சொன்னதெல்லாம் மீறி அதற்கு மாறாக இன்று மாறி அந்த நாடு தன் போக்கை மாற்றியுள்ளது.  ரஷ்ய அதிபர் புட்டின் தான் தான் நிரந்தர அதிபர் என்று சொல்லக் கூடிய  அளவில் நடவடிக்கைகள். அமெரிக்காவின் டிரம்ப் பேச்சுகள்  யாவும் பெரிய தாக்கத்தையும் பயன்பாட்டையும் உருவாக்கவில்லை. அரசியல் என்பது மக்கள் நலன் சார்ந்தது. புரியாமல் #சிலர் ‘#அரசியல் #செய்யணும்ல’ என்பார்கள் வேடிக்கையாக இருக்கும். அப்படி அரசியல் செய்வது தனிப்பட்ட நபர், தனிப்பட்ட குழுவின் ஆதாயத்திற்கு தான், அது அரசியல் அல்ல.சுய வியாபாரம், அவ்வளவுதான்....

உலகமயமாக்கல் என்று வந்தபின் நாடு, வட்டாரம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு தடையாகிவிட்டது.  நாட்டின் இறையாண்மை, மக்கள் நல அரசு மக்களுக்காக அரசு என்பது அமைய வேண்டுமென்றால் எப்படி உரிமையை கேட்கிறார்களோ   தங்களுடைய கடமையையும் பொறுப்பையும் நாட்டிற்கு செலுத்த வேண்டும், இயற்கையையும் பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் கரானாக்கள் நம்மை மிரட்டத் தான் செய்யும். கொடுத்ததை அனுபவிக்க தயாராவோம்.

*கே. எஸ். இராதாகிருஷ்ணன்*
17.04.2020
*ksrposts*

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...