Monday, April 27, 2020

#சாத்தூர் கடந்த 45ஆண்டுகளுக்கு முன் இருந்த 300க்கு மேற்பட்ட #பேனா_நிப் #ஆலைகள்_என்னவானது?

#சாத்தூரில் கடந்த 45ஆண்டுகளுக்கு முன் இருந்த 300க்கு மேற்பட்ட #பேனா_நிப் #ஆலைகள்_என்னவானது?
————————————————
அரசு மானியம் இல்லாதததும், 'லெட்' மற்றும் 'பால்பாயின்ட்' பேனா வருகையாலும் சாத்தூரில்  செயல்பட்டு வந்த 300க்கும் மேற்பட்ட பேனா நிப் தொழிற்சாலைகள் இன்று வெறும் மூன்றாக குறைந்துள்ளது. பேனாவில் தேய்மானம் என்பது அதன் நிப் மட்டுமே என்பதால் நிப்பை மாற்றினால் போதும் பேனாவை தொடர்ந்து பயன்படுத்த முடியும். இதனால் ஒரு காலத்தில் பேனாவை விட பேனா நிப் தேவை அதிகமாக இருந்தது. எங்கள் கிராமத்தை சேர்ந்த கருப்பையா ஆசாரி



மகன்கள்  எனது பள்ளி  தோழர்கள் சுப்பிரமணி, மாணிக்கம் ஆகிய இருவர்



சாத்தூரில் நிப் கம்பெனி நடத்தினர்.
அவர்களிடமிருந்து தெரிந்த விபரங்கள்
வருமாறு....

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் 300க்கு மேற்பட்ட பேனா நிப் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்தன. 2,500க்கும் மேற்பட்டோர் இத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இந்திய அளவில் சாத்துர்ரில் மட்டுமே நிப் தொழிற்சாலைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. 
அக்காலகட்டத்தில் நிப் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு ஷிப்ட் ஆக இரவு பகலாக வேலை பார்த்தனர். அதன்பின் அந்த மானியம் நிறுத்தப்பட்டு விட்டது. அனைத்து துறை அலுவலர்கள் மைப் பேனா பயன்படுத்தி வந்தனர். பேனாவில் அதிகம் தேய்மானம் ஆகும் பகுதி அதன் நிப். இதனால், பேனா நிப் தேவை அதிகமாக இருந்தது. அதன் காரணமாக விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மட்டும் 1962-ஆண்டில் 250 க்கும் மேற்பட்ட பேனா நிப் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்ததாக ஒரு தகவல். சாத்தூரை சுற்றியுள்ள சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 2,500 தொழிலாளர்கள் இவற்றில் பணி புரிந்து வந்துள்ளனர். தென்னிந்திய அளவில் சாத்தூரில் மட்டுமே நிப் தொழிற்சாலைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, ரஷ்யா, முதலான நாடுகளிலிருந்து பேனா நிப் தயாரிப்புத் தொழிலுக்காக மானிய விலையில் எவர்சில்வர் தகடுகள் வழங்கப்பட்டன.

நிப்புத் தொழிலை, சாத்தூரில் 1950-ஆம்ஆண்டுகளில்தொடங்கப்பட்டதாகும். இக்காலக் கட்டங்களிலில் இராஜகோபால ஆச்சாரி என்பவர், தன்னுடன் மேலும் சிலரையும் சேர்த்துக்கொண்டு,பேனா நிப்புத் தயாரிக்கிற தொழிலில் முதன் முதலாக ஈடுபட்டார். இவர் பித்தளையில்தான் முதலில் நிப்புகளைத் தயாரித்துள்ளார். பித்தளையில் நிப்புத் தயாரிப்பதால், ஊற்பத்திச் செலவுகள் அதிகமாக ஆனது, இதனால் சேலம் உருக்காலையிலிருந்து கழிவுத் தகடுகளை வாங்கிக்கொண்டு வந்து, அவற்றில் நிப்புத் தயாரித்தார்.

இத் தொழிலில் இவர் கண்ட வெற்றியைப் பார்த்து, அழகர்சாமி ஆச்சாரி என்பவரும் நிப்புத் தயாரிப்புத் தொழிலில் இறங்கினார். இவருடன், இவரது புதல்வாரன மனோகரன் ஆச்சாரியும், சகோதரர் வரதராஜ ஆச்சாரியும் இணைந்து இத்தொழிலை இன்னும் வேகமாக முன்னெடுத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து சுத்தியல் மற்றும் வெட்டிரும்பால் தகடுகளைத் துண்டாக்கி நிப்புத் தயாரித்த நிலையை மாற்றி, இதற்கென்றே கையால் இயக்கக்கூடிய இயந்திரத்தையும் உருவாக்கி, அதன் மூலமாக நிப்புகள் உற்பத்தியை அதிகரித்து, ராஜஸ்தானில் உள்ள நிப்பு வியாபாரி ஒருவருடன் சந்தைப் படுத்தும் தொடர்பை உண்டாக்கிக் கொண்டு அவருக்கு தயாரிக்கிற நிப்புகளை விற்பனை செய்தனர்.

பின்பு இராஜகோபால் ஆசாரி மற்றும் அழகர்சாமி ஆச்சாரி கூலிமுறையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள், தனித்தனியாக நிப்புத் தயாரிக்கிற இயந்திரத்தை வைத்து குடிசைத் தொழில் போல தனித் தனியாக தொழிலைத் தொடங்கினர்.

சத்தூரில் நிப்புக் கம்பெனிகளின் எண்ணிக்கை, சீக்கரமே 20 ஆக உயர்ந்தது. 1975 முதல் 1985 வரையிலான இந்தப் பத்தாண்டுக்கால இடைவெளியில் மொத்தம் 150 நிப்புக் கம்பெனிகள் சாத்தூரில் உருவாயின. இந்த 150 கம்பெனிகளில் 2000 க்கும் அதிகமான கூலித் தொழிலாளர்கள் வேலை பார்த்தனர்.இந்த வேகமான வளர்ச்சி காலமும் ‘நிப்புத் தொழிலின் பொற்காலம் ஆகும்.

தொழிலாளர்களுக்கும் குறைவின்றிக் காசு புழங்கும் தொழிலாய் இது இருந்தது. நாள் ஒன்றுக்கு இரண்டு ஷிஃப்ட் பகல் இரவு என வேலை பார்த்து, தினமும் 500 ரூபாய வரையில் இரட்டிப்பாகக் பெற்றனர்.

இத் தொழில் இங்குத் துவக்கப்பட்டக் காலக்கட்டங்களில், 144 எண்ணிக்கை கொண்ட நிப்பு ஒரு ‘குரோஸ்’ என நிர்ணயம் செய்யப்பட, குரோஸ் ஒன்றுக்கு 25 பைசா எனவும் கூலி நிர்ணயம் செய்யப்பட்டது. அடுத்தடுத்தக் காலக்கட்டங்களில், ஒரு ரூபாய், ஒன்றரை ரூபாய், இரண்டு ரூபாய் என கூடுதலாக்பட்டது, இதனால் ஆர்வத்துடன் இந்த சீர்ய பணியில் ஈடுபட்டத் தொழிலாளர்கள், நாள் ஒன்றுக்கு 35 முதல் 40 குரோஸ் வரையில் உற்பத்தித் திறனையும் கூடுதலாக்கினர். தொழிலாளர்களுக்கு நிர்வாகம் வாரம் ஒரு முறை கூலி தந்தது. ஏற்கனவே இப்பகுதியில் செயல்பட்டுவந்த சேவு உற்பத்தி மற்றும் தீப்பெட்டித் தொழிலுக்கு இணையான நிப்பு தொழிலாக உயர்ந்தது.
இதனால் சாத்தூர் பொருளாதார அந்தஸ்தில் வளர்ச்சி அடைந்தது.

பேபி மாடல், 2 ஆம் நம்பர் நிப்பு, 3 ஆம் நம்பர் நிப்பு, 4 ஆம் நம்பர் நிப்பு, ஐந்தரை நம்பர் நிப்பு, உருண்டை நிப்பு, ஆர்ட் நிப்பு எனப் பல விதமான ரகங்கள்  சாத்தூரில் உற்பத்தி செய்யப்படும் நிப்புத் தொழிலுக்கு காரணம், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட சில வட மாநிலங்களும், நேபாளமும்தான், ஏன் என்றால் இவ்விடங்களில் மழைக் குளிர் காலங்களில் பால் பாயிண்ட் நிரப்பப்பட்டிருக்கும் மை உறைந்துவிடும் என்பதால்,இதற்க்கு பதிலாக மை நிரப்பிய நிப்புப் பேனாக்களே பயன்படும்.

நிப் தயாரிப்பு  துவங்கிய ஆரம்பகாலங்களில் நல்ல வரவேற்பு இருந்தது. 1990 காலக்கட்டத்தில்ல் பால் பாயின்ட் மற்றும் லெட் பேனாக்களின் வருகையால் மை பேனாக்கள் மற்றும் நிப்புகளின் தேவை குறைய துவங்கியது. குடிசைத் தொழிலில் வரும் இத்தொழிலுக்கு அரசின் சலுகையோ கடனுதவியோ வழங்கப்படுவதில்லை. கூடவே அரசும் நிப் தயாரிப்புக்கு அளிக்கப்பட்டு வந்த மானியத்தையும் நிறுத்தப்பட்டதால் தற்போது தொழில் நடத்தவே சிரமமாக உள்ளது. தற்போது மொத்தமே 3 தொழிற்சாலைகளில் 10 தொழிலாளர்களைக் கொண்டு நிப் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. மீண்டும் இத்தொழில் புத்துயிர் பெற வேண்டுமானால் மானிய விலையில் எவர்சில்வர் தகடுகள் வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் பேனா பயன்படுத்துமாறு அறிவித்தால் எங்கள் தொழிலில் பலம் பெறும். 

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
26.04.2020
#ksrposts
*சாத்தூர்* #sattur
#நிப் #pen_nip

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...