Wednesday, April 29, 2020

*விதை_நெல்லை*

*விதை_நெல்லை*
————————
விதை நெல்லை பாதுகாப்பது கிராமத்தில் முக்கிய அடிப்படை கடமையாகும். அதை யாரும் தொடவும் மாட்டார்கள், எந்த பயனுக்கும் அதை பயன்படுத்துவதில்லை. விவசாயிகளுக்கு அது மரபுரீதியான வைப்புச் சொத்து (traditional fixed asset).

“*வெதை நெல்லை வித்தவைரை லாபம்னு நெனைக்கிறவனும், வெதை நெல்ல வேகவச்சு தின்னவனும்  எந்த காலமும்  வெளங்க மாட்டான்னு *‘’ என



சொலவடை சொல்லுவாங்க.



தலையே போனாலும் வெதை நெல்லுல மட்டும் கை வைக்கக் கூடாது அதுதான் நம்ம வாழ்வு என பய பக்தியோடு கிராமத்தில் நம்பிக்கை.வழி வழியா பாரம்பரியமாக  இதை கடை பிடிப்பது உண்டு.

பாரம்பரிய நெல் விதைகள்,இந்தியாவில் 200000 மேற்பட்ட நெல் வகைகள் இருந்துள்ளதாக அறியப்படுகிறது. இந்தியாவில் பசுமைப்புரட்சியின் விளைவாக பல பாரம்பரிய நெல் ரகங்கள் அழிந்து பட்டன.

இந்தியாவின் கட்டாக் அரிசி ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர் ஆர்.எச். ரிச்சாரியா, 1959 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு அதிக விளைச்சல் தரும் பாரம்பரிய விதை நெல் வகைகளை சேகரித்து அவற்றை பயன்படுத்துவதே நல்லது  என்றும் நவீன ஐ.ஆர்.ஆர் ரக வீரிய நெல் விதைகள்  அதிகம் நோய்கள் பரப்பக்கூடியவை என்றும் எடுத்துக்கூறி நவீன ரகத்திற்கு அனுமதி மறுத்து அதன் விளைவாக அவர் மாற்றம் செய்யப்பட்டு, பின் நோயுற்று வறுமையில் வாடி அவர் இறந்தார்.

பின்னர் அப்பதவிக்கு வந்த டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் மற்றும் மற்ற இயக்குநர்களாலும் டாக்டர் ஆர்.எச். ரிச்சாரியா சேகரித்திருந்த பாரம்பரிய ரக விதைநெல்கள் காணாமல் போனதைப்பற்றிக் கூற மறுத்து விட்டார்கள். எம்.எஸ். சுவாமிநாதன் காலத்தில் வந்த பசுமைப்புரட்சியில் அதிக விளைச்சல் நவீன ரகங்கள் முக்கியத்துவம் தரப்பட்டு, பாரம்பரிய நெல் விதைகள் இந்தியாவில்
அழிக்கப்பட்டது பெரிய துயரமான இழப்புகள் .

மீண்டும் விவசாயிகளிடையே பாரம்பரிய நெல் விதைகளை மீட்டு  எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
இது  குறித்து  திரு  எ. வி.  பால
சுப்பிரமணியம் சகோதரி  திருமதி கே.விஜயலட்சுமி ஆகியோர் ஆய்வு செயது CIKS சார்பில் ‘Traditional Rice
Varieties of Tamilnadu’ என்ற  அரிய
நூலை வெளியிடப்பட்டுள்ளது.  இதில் நமது தமிழகபாரம்பரியநெல்விதைகளை 
வகை படித்தி  தொகுத்துள்ளனர். 
அவர்களுக்கு பாராட்டுக்கள்.

read more at https://satavic.org/dr-richharias-story-crushed-but-not-defeated/

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
28.04.2020 
#ksrposts

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...