Friday, April 10, 2020

#இப்படியும்_ஆளுமைகள்!! #எத்தனைப்_பேருக்கு_தெரியும். #காந்தி_கிராம_பல்கலைக்கழக #நிறுவனரும் #டிவிஎஸ்_நிறுவனர் #டி_வி_சுந்தரம்_அய்யங்காரின்_புதல்வி #செளந்தரம்_அம்மாளின்_கணவர் #உயிர்களை_காத்த_டாக்டர்_செளந்தர்ராஜனை_பிளேக்_நோய்_பலி_வாங்கிய_வன்மம்.

#இப்படியும்_ஆளுமைகள்!! 
#எத்தனைப்_பேருக்கு_தெரியும்.

#காந்தி_கிராம_பல்கலைக்கழக #நிறுவனரும் #டிவிஎஸ்_நிறுவனர் 
#டி_வி_சுந்தரம்_அய்யங்காரின்_புதல்வி #செளந்தரம்_அம்மாளின்_கணவர் #உயிர்களை_காத்த_டாக்டர்_செளந்தர்ராஜனை_பிளேக்_நோய்_பலி_வாங்கிய_வன்மம். 
———————————————-
நேரு அமைச்சரவையில் மத்திய முன்னாள் அமைச்சர், 1962ல்மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்,1957ல்வேடச்சந்தூர் மற்றும் 1952ல் ஆத்தூர் தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர் உத்தமர் காந்திக்கு மிக நெருக்கமான சீடர், டிவிஎஸ் குடும்பத்தைச் சார்ந்த சவுந்தரம்மாளின் கணவர் டாக்டர் செளந்தர்ராஜன் 1923ஆம் ஆண்டில் சென்னை ராஜதானியிலேயே சிறந்த மாணவராக மருத்துவக் கல்லூரியில் தேர்ச்சிப் பெற்றார். அந்தக் காலக் கட்டத்தில்  பிளேக் நோய் இந்தியாவையே உலுக்கியது. 

இந்த நிலையில் தன் மனைவி செளந்திரம் அம்மாளை மதுரையில் வீட்டில்  விட்டு  விட்டு பிளேக் நோயிலிருந்து மக்களைக் காக்க சென்னை பொது மருத்துவமனைக்கு பணிக்கு திரும்பினார். 

பிளேக் நோய் இன்றைய கரானா நோயைப் போல 1925ஆம் ஆண்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.  டாக்டர் செளந்தராஜன் தலைமையில் சிகிச்சைகள் செய்து பல நோயாளிகளைக் காப்பாற்ற பட்டனர். ஆனால் ஒரு நோயாளாயிடமிருந்து அவருடைய கையுறை மூலமாக பிளேக் நோய்க் கிருமி  டாக்டர் செளந்தராஜன் தாக்கி மரணத்திற்கு கொண்டு சென்றது. மிகவும் அபாயகரமான நிலையில் அவர் உடல்நிலை  இருந்த போது தன் மனைவி செளந்திரம் அம்மாளை அழைத்து நான் வாழ்வது சிரமம், வீட்டிலேயே இல்லாமல் மருத்துவக்க்ல்லூரியில் பயின்று மக்களுக்காக பணியாற்ற வேண்டும், மறுமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டு கண்களை மூடினார். 

பிற்காலத்தில்  டிவிஎஸ் குடும்பம் செளந்திரம் அம்மாளின் மறுமணத்திற்கு ஒத்துழைக்கவில்லை என்றாலும் உத்தமர் காந்தி தனது சபர்மதி ஆசிரமத்தில் தான் நெய்த வேட்டியையும் புடவையையும் மணமக்களுக்கு கொடுத்து செளந்திரம்மாள் - ராமச்சந்திரன் திருமணத்தை உணவு பாயாசத்தோடு நடத்தினார். இந்த செளந்திரம்மாளைப் பற்றி இன்றைய சமுதாயத்தில் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. மறுமணம் செய்த ராமச்சந்திரன் கேரளத்தைச் சார்ந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை  சார்ந்தவர். செளந்தரம்மாளோ திருநெல்வேலி மாவட்ட திருக்குறுங்குடி சேர்ந்த வைதீக வைணவ ஆச்சார குடும்பம். இந்த திருமணம் எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. அன்றைய சமுதாயத்தில் செளந்திரம்மாள் எவ்வளவு சிக்கல்களையும் சிரமங்களையும் சந்தித்திருக்க வேண்டும். இவர்களைப் பற்றி ஏற்கனவே நிறைய பதிவுகளை செய்துள்ளேன். மற்றொரு விரிவான பதிவை தினமணி ஏட்டிற்கு இரண்டொரு நாட்களில் அனுப்ப உள்ளேன். 

செளந்திரம்மாள் - ராமச்சந்திரன் தம்பதியை பார்த்தாவது இன்றைய சமுதாயம் பார்த்து புரிந்து தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இந்த பதிவு. அரசியலும் பொதுவாழ்வு என்பது கண்ணியத்துக்குரிய மக்கள் நல அரசியலாக இருக்க  வேண்டும். நல்லவர்கள் தகுதியானவர்கள் பொதுவாழ்வில் அங்கீகரிக்கப்பட வேண்டும். இவர்தான் தைரியமாக சாதித்த மகோன்னதம் மங்கையர் திலகம்.அன்றைய புரட்சி புதுமைப் பெண்.இவரின் ழுழ வரலாற்றை படித்தால் அக்காலத்தில் இப்படியொரு
வீர திருமகளா...? நினைக்க தோனும்.

செளந்திரம் அம்மாள் ராமச்சந்திரனைப் பற்றிய முந்தைய பதிவு
https://ksradhakrishnan-ksrblogs.blogspot.com/2020/01/blog-post_11.html

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
10.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...