Saturday, April 11, 2020

பிரதமர்களின்_தேசிய_நிவாரண_நிதி

#பிரதமர்களின்_தேசிய_நிவாரண_நிதி 
————————————————
பிரதமர்களின் தேசிய நிவாரண நிதி 
குறித்து நேற்றைக்கு ஆங்கிலத்தில் இங்கு பதிவிட்டிருந்தேன். பல நண்பர்கள் தமிழில் மொழியாக்கம் செய்து பதிவிடுங்கள் என்றார்கள்.
இன்றைக்கு தினமணியில் அது தொடர்பாக விரிவான செய்திகள் வந்துள்ளன. அது வருமாறு.

பிரதமரின் தேசிய நிவாரண நிதி, 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. இந்தியப் பிரிவினையைத் தொடா்ந்து உருவான மேற்கு, கிழக்கு பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு விரட்டிப்பட்ட பல லட்சம் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர் கள் ஆகியோருக்கு நிவாரணம் அளிக்க வேண்டிய கட்டாயம் இந்திய அரசுக்கு ஏற்பட்டது.




இந்தியப் பிரிவினையைத் தொடா்ந்து அரசிடம் இருந்த நிதியில் பெரும் பகுதி புதிய நாடான பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு விட்டது. இந்திய அரசிடம் அத்தனை அகதிகளுக்கும் உணவும், உடையும் அளித்துப் பாதுகாக்கப் போதிய நிதியாதாரம் இருக்கவில்லை. பிரிவினையைத் தொடா்ந்து பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் குடியேறியவா்களுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் பிரதமரின் தேசிய நிவாரண நிதி.

பல்வேறு துன்பங்களுக்கும் வேதனைகளுக்கும் உள்ளாகி அகதிகளாகத் தாய் மண்ணுக்குத் திரும்பி இருக்கும் மக்களின் நலனுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அப்போதைய பிரதமர்  நேரு கூறினார். இந்த நிதியானது அவா்களின் வாழ்வை மேம்படுத்த உதவும் என்றும் பிரதமா் நேரு நம்பிக்கை தெரிவித்தாா்.

தற்போதைய சூழலில் (1948-ஆம் ஆண்டு) இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டாலும், எதிர் காலத்தில் அனைத்துவிதமான அவசரகாலங்களிலும் இது பயன்படுத்தப்படும் என்றார் பிரதமர் நேரு.

இந்த நிதியை உருவாக்கிய பிறகு பிரதமர் நேரு கூறுகையில், ‘‘பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்க வேண்டுமென மக்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன். பிரதமர்,காங்கிரஸ் கட்சியின் தலைவர், துணைப் பிரதமர், மத்திய நிதியமைச்சர், டாடா அறக்கட்டளையின் பிரதிநிதி, இந்தியத் தொழிலக மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி ஆகியோரைக் கொண்ட குழுவானது இந்த நிதியை நிர்வாகிக்கும்’’ என்றாா்.

எனினும் வேறு யாரெல்லாம் இந்த நிதியை நிர்வகிக்க முடியும், நிதியின் மற்ற நோக்கங்கள் உள்ளிட்டவற்றை அப்போதைய பிரதமர் நேரு தெளிவாகக் குறிப்பிடவில்லை. தேசிய நிவாரண நிதியைப் பெறுவதற்காக தில்லியில் உள்ள ‘சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா’ வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டது.

அந்த வங்கியின் கிளைகளில் மக்கள் தங்கள் பங்களிப்பை வழங்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. மருத்துவ நிவாரணம், கல்வி, ஆதரவற்றோரைக் காத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மக்கள் நிதியளிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆரம்பத்தில் தேசிய நிவாரண நிதிக்கு மக்களின் பங்களிப்புகள் குவிந்தன. ஆனால், அதன் பிறகு அந்த நிதிக்கான பங்களிப்பு குறையத் தொடங்கியது.

1953-54 காலகட்டத்தில் அப்போதைய பிரதமர் நேரு தேசிய நிவாரண நிதிக்கு மக்கள் தாராளமாகப் பங்களிக்க வேண்டும் என்று பல முறை பொதுவெளியில் வேண்டுகோள் விடுத்தார் நாட்டில் பேரிடர்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாகவும் ஆனால் நிவாரண நிதிக்குப் போதிய பங்களிப்பு இல்லாததால், பலருக்கு உதவ முடிவதில்லை என்றும் அவா் தெரிவித்தார்.

அதன் பிறகு குறிப்பிட்ட பேரிடரகளுக்கென நிவாரண நிதி வசூலிக்கும் முறையை பிரதமா் நேரு கடைப்பிடித்தார். 1950-களின் தொடக்கத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக வெள்ள நிவாரண நிதி வசூலிக்கப்பட்டது. பிகாரில் ஏற்பட்ட பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பதற்கென பஞ்ச நிவாரண நிதி வசூலிக்கப்பட்டது.

இத்தகைய சூழலில், 1958-ஆம் ஆண்டு செப்டம்பரில் தேசிய நிவாரண நிதிக்கு மக்கள் பங்களிக்க வேண்டுமென்று பிரதமார் நேரு மீண்டும் கோரிக்கை விடுத்தார். 1962-ஆம் ஆண்டு சீனாவுடன் ஏற்பட்ட போருக்குப் பிறகு நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த நிதி வசூலிக்கப்பட்டது.

1970-களின் மத்தியில் தேசிய நிவாரண நிதியின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கத் தொடங்கினா். இந்தக் காலகட்டத்தில்தான் அரசு அலுவலர்களின் ஒரு நாள் ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்குவது போன்றவற்றை மத்திய அரசு ஊக்குவிக்க ஆரம்பித்தது.

இந்தச் சூழலில் 1974-ஆம் ஆண்டு சோஷலிஸ்டுகளான மகாராஷ்டிர எம்எல்ஏ மிருனாளினி கோரே, பிகாரின் பங்கா தொகுதி எம்.பி. மதுலிமாயி இருவரும் தேசிய நிவாரண நிதி செலவு செய்யப்படும் விதம் குறித்து கேள்வி எழுப்பினர்.அது தொடா்பான தகவல்கள் நாடாளுமன்றத்தில் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் அவா்கள் முன்வைத்தனர்.

இந்நிலையில், தேசிய நிவாரண நிதி போன்ற பொது நிதியை செலவு செய்வது தொடரபான வழிமுறைகள் குறித்து மகாராஷ்டிரத்தின் கணக்குத் தணிக்கையாளர், இந்திய தலைமை கணக்குத் தணிக்கை ஆணையரிடம் (சிஏஜி) விவரம் கோரினார். அப்போதைய காலகட்டத்தில் நாட்டில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் நிலவி வந்ததால், இந்திய தலைமை கணக்குத் தணிக்கை ஆணையர் மகாராஷ்டிரத்தின் தணிக்கையாளருக்கு எந்தவொரு விவரத்தையும் வழங்கவில்லை.

அதற்குப் பிறகான காலகட்டத்திலும் தேசிய நிவாரண நிதி, முதல்வரின் நிவாரண நிதி ஆகியவை செலவு செய்யப்படும் விதம் தொடா்பாக மக்களிடையே வெளிப்படைத்தன்மை இல்லாத சூழல் நிலவியது. அதைத் தொடரந்து, 2006-ஆம் ஆண்டு தகவலறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் சைலேஷ் காந்தி, தேசிய நிவாரண நிதி நிரிவகிக்கப்படும் விதம் தொடரபான தகவல்களை அளிக்குமாறு பிரதமர் அலுவலகத்திடம் கோரினார் ஆனால், அது தொடரபான தகவல்களை வழங்க பிரதமார அலுவலகம் மறுத்தது.

அதையடுத்து, சைலேஷ் காந்தி தலைமை தகவல் ஆணையரிடம் முறையிட்டார் அதை ஆராய்ந்த அப்போதைய தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா தேசிய நிவாரண நிதி தொடர்பான தகவல்களைப் பொது வெளியில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் பிறகே அந்தத் தகவல்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டது.

அதன்படி, பிரதமர் அலுவலகத்தில் உள்ள இணைச் செயலார் அந்த நிதியைக் கண்காணித்து வருவதாகக் கூறப்பட்டது. அவருக்கு உதவி புரிய இயக்குநா் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. நிவாரண நிதிக்கு வழங்கப்படும் பங்களிப்புகள் அனைத்தும் ‘சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா’ வங்கியின் கணக்கிலேயே தொடா்ந்து செலுத்தப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதற்குப் பிறகுதான் பிரதமர் நிவாரண நிதியில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டது.

பிஎம்-கேரஸ் நிதி

கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) ஒழிப்புக்காகத் தொடங்கப்பட்டுள்ள பிஎம்-கேரஸ் நிதி நிர்வாக அமைப்பில் பிரதமர் தலைவராக உள்ளார். மத்திய உள்துறை அமைச்சர், மத்திய நிதியமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகியோர் உறுப்பினரகளாக உள்ளனா்.

இந்த நிதியை தலைமை கணக்குத் தணிக்கை ஆணையார(சிஏஜி) தணிக்கை செய்வார எனத் தெரிகிறது.

#The_Prime_Minister’s #National #Relief_Fund 
————————————————-
This was a fund set up in 1948, January, with the purpose of providing the prime minister with some monies to be used for the relief and rehabilitation of refugees from Pakistan. Jawaharlal Nehru, then the prime minister of India, announced that the objective of this fund was to help people who were distressed in any way. Monetary help from this fund, he explained, could help them rebuild their lives. He was also clear that this fund was for any type of emergency or distress even though for the moment, i.e. 1948, it would be used for the rehabilitation of the victims of partition.
.
This is what Nehru announced: 
“I invite donations to (the Prime Minister’s National Relief) Fund. To begin with, this fund will be managed by a committee consisting of the Prime Minister, the President of the Indian National Congress, the Deputy Prime Minister, the Finance Minister, a representative of the Tata trustees and a representative of industry and commerce to be chosen by the Federation of Indian Chambers of Commerce.”
.
Nehru did not make it clear who else would be managing the fund and what exactly would be the ambit of this fund. A savings bank account for the fund was opened in the Central Bank of India located at Janpath, New Delhi  and, people were advised to donate money at any of its branches or sub-branches in the country. A facility was given for the donor to also ear mark the donation for any specific purpose such as medical relief, education and care of orphans. 
.
Donations immediately began to flow in. However, after the first flush of enthusiasm, the donations stopped. In 1953-54, Nehru made a number of public announcements requesting people to donate generously to the PMNRF. He said that while disasters in the country had not stopped, donations to the fund had, this hampered his ability to extend episodic relief to people. 
.
Over the years the Prime Minister also started earmarked funds for specific disasters. So there were a number of flood relief funds started to deal with the heavy floods in the early-1950s, a drought relief fund was there to collect money for the prime minister to help Bihar that was hit by a drought. In September 1958, Nehru once again issued an appeal for more donations to the PMNRF.  In 1962, money was collected for the defense of the country when China attacked India.
.
By the mid-1970s, the faith of people in the PMNRF had begun to get somewhat diluted. By this time the government too had begun to resort to some coercive strategies— like asking all of its employees to donate a day’s salary to the fund, or simply taking away all the savings in the numerous accounts that school children had been asked to open. Of course this was not open coercion. Due consent was taken. But,….
.
In 1974, September, a formal query came from the Accountant General of Maharashtra to the Comptroller and Auditor General of India on the PMNRF. The query was a consequence of the actions of Mrinalini Gore, MLA in Maharashtra and  Shri Madhu Limaye, Mumbai based socialist Member of Parliament who at this time represented the Banka seat in Bihar. Limaye was quite forthright in his questioning. He said, the funds of the PMNRF had never been placed before the Parliament. Following the practise of the PMNRF the analogous funds at the disposal of the Chief Ministers of states too were not placed before the Vidhan Sabha.  The AG Maharashtra asked the CAG of guidance on how to deal with such public funds. As it happened, in those days of intense political turmoil, the CAG did not give any reply to the AG, the AG did not give any reply to Mrs. Gore. Madhu Limaye’s query simply got lost. In the coming years the PMNRF and the various CMs funds continued to be beyond public scrutiny. No one knew how the PM spent this money. But, about the CMs there was widespread suspicion that they used this money to help out only those who could help them build some political capital.
.
The next bit step towards questioning the PMNRF came when the Right to Information Act was put in place. In 2006, Shailesh Gandhi, an RTI activist from Mumbai, sent a query to the Prime Minister’s Office requesting details about the working of the PMNRF. The PMO refused to give any information. Finally Gandhi appealed to  the Chief Information Commissioner. Wajahat Habibullah, the CIO, ruled that while the PMNRF was at the disposal of the PM to spend at his discretion, its details had to be made public. The PMO then informed that the fund was supervised by a Joint Secretary in the PMO. He was assisted by a Director. And the money was usually kept in the original Central Bank of India branch at Janpath, New Delhi.
.
Gandhi used this information to get details of the monies spent by the Chief Minister’s fund in Maharashtra. Gandhi specifically asked Vilas Rao Deshmukh, the Congress chief minister, to provide details of all those institutions that had been given more than ₹ 50,000 as donation from the CM’s fund. The Maharashtra government tried its best to not give any information. It was only in 2007 that after much deliberation and debate that the Information Commission ordered the government to provide Gandhi with the required information.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
11.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...