Sunday, April 12, 2020

Men may come, * *men may go

*Men may come, *
*men may go*
————————————
இன்று காலை  அவசர நிமித்தமாக நானே சென்று சில பொருட்களை வாங்க வேண்டியிருந்ததால் கடந்த மார்ச் 25ம் தேதிக்கு பிறகு அடையார் காந்தி நகர் வரைக்கும் சென்றுவிட்டு திரும்பினேன். சென்று திரும்பிய போது கண்ட காட்சிகள் மனதிற்கு சோர்வைத் தந்தது. ஓட்டுநரிடம் என்ன என்று தெரிந்து வாருங்கள் என்று அனுப்பிய போது தான் உணர்ந்தேன். 




அருகே  இருந்த  காய்கறி கடை அருகே ,விளிம்பு  நிலை மக்கள் பரிதாபமாக நிற்கிறார்கள். சிலருக்கு தமிழ் தெரியாமல் வேதனையோடு பிச்சை எடுக்கிறார்கள்.கண் கலங்க வைக்கிற துயரம் இது .இவர்களை பார்த்தால் எதுவும்  கேட்காமல்  உதவோம்.அவர்களையும்  கண்ணியமாக பார்ப்போம். அவர்களுக்கு உதவி செய்வதை செல்போனில் படம் பிடிப்பதை தவிர்ப்போம்.

இந்த நிலை யாருக்கும் வரலாம். மனித
மானிடம் தழைக்க வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் தாங்கள் இயங்குவதில் முடிந்த அளவு தன்னலமும் இருக்க வேண்டும், நேர்மையான பரந்த மனப்பான்மையும் இருக்க வேண்டும். men may come, men may go என்ற Alfred Lord Tennyson வரிகள் நினைவுக்கு வந்தன. யாரும் நிரந்தரமில்லை.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
12.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...