Tuesday, April 14, 2020

#நாடாளுமன்ற_தொகுதி_மேம்பாட்டு #நிதியில்_ஒதுக்கிய_5000கோடியை #செலவிடாத_எம்பிக்கள்* #MPLADS

#நாடாளுமன்ற_தொகுதி_மேம்பாட்டு #நிதியில்_ஒதுக்கிய_5000கோடியை #செலவிடாத_எம்பிக்கள்* #MPLADS 
———————————————
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மொத்தம் 788 எம்பிக்கள் உள்ளனர். ஒவ்வொரு உறுப்பினருக்கும் வருடம் ஒன்றுக்கு ரூபாய் 5 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியாக மத்திய அரசு ஒதுக்குகின்றது. இதை தற்போது இரண்டு வருடங்களுக்கு ரத்தும் செய்யப்பட்டுள்ளது. 17வது நாடாளுமன்றத்தில் 2019-20க்கான ஒதுக்கப்பட்ட  தொகுதி மேம்பட்ட நிதியில் 5,275.24 கோடி செலவு செய்யாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பணியை புறந்தள்ளியுள்ளனர். கடந்த 15, 16வது நாடாளுமன்றத்தில் எம்பிக்களுக்கு ஒதுக்கிய இந்த நிதி 200 சதவிகிதத்திற்கு அதிகமாகவே செலவிடப்படாமல் அந்த எம்பிக்கள் மந்தப் போக்கில் இருந்துள்ளனர். இது 15-16வது நாடாளுமன்றம். 14வது நாடாளுமன்றத்திலும் இதே கதை தான். அந்த வருடம் செலவிடாத தொகை அடுத்த வருடத்திற்கு கணக்கில் சேர்க்கப்படும். 5 வருடம் பதவியில் இருந்து நேர்மையாக ஒதுக்காமல் காலத்தை கடத்தி விட்டு சென்ற முன்னாள் எம்பிக்களும் உண்டு.  நடைமுறையில் உள்ல 2020-21ல் இந்த திட்டத்திற்கு ரூபாய் 1,518 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் கண்டனங்கள் இந்த நிதியை ரத்து செய்வதற்கு இருந்தாலும் இந்த நிதி எந்த அளவு மக்களுக்கு நேர்மையாக பயன்பட்டுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். ஒரு பக்கம் நிதியை சரியாக பயன்படுத்தப்படவில்லை அப்படியே பயன்படுத்தினாலும்  அதில்  முறை



கேடுகளும்,சரியாக ஒதுக்கவில்லை
என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
ஆனால் இதற்க்கு ஒதுக்கிய ரூ 5000 கோடியை  மக்கள்  நலன்  கருதி செலவிடாத. எம்.பி.க்கள் உள்ளனர்.
அவர்களுக்கு இதற்க்கு நேரமில்லை. என்ன செய்ய....

#mplad
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
14.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...