Sunday, April 12, 2020

#தி_ஜானகிராமனுக்கே_கதை_எழத #தவிப்பா? #அவரே_மன்னிப்புக்_கேட்டுகிறார்.... #என்ன_காவேரிக்கும்_கும்பகோணத்துக்கும்_சோதணை

#தி_ஜானகிராமனுக்கே_கதை_எழத #தவிப்பா?
#அவரே_மன்னிப்புக்_கேட்டுகிறார்....
#என்ன_காவேரிக்கும்_கும்பகோணத்துக்கும்_சோதணை
————————————————
தி. ஜானகிராமனின் இதுவரை அறியப்படாத கதைகள் 28யை தொகுத்து ‘கச்சேரி’என்ற தலைப்பில் காலச்சுவடு பதிப்பகம், சுகுமாரனை பதிப்பாசிரியராக கொண்டு  வந்துள்ளது.தலைப்பிடாத  கடைசி கதையாக 1975ல் தி. ஜானகிராமன் புது வடிவில் கதை எழுத முடியாமல் அவரே தவித்ததை உட்குறியிட்டு அவரே எழுதியுள்ளார். இது 1972 அக்டோபர் சிவாஜி இதழில் வெளியானது. 
•••



  “யாரு பேத்தி?”
  “மொட்டைய்யரு பேத்தியுவ”
  “மொட்டைய்யரு பேத்தியுவளா?
  “ஆமா - கலி கட்டிக்கிட்டு, மயிரை வெட்டிக்கிட்டுப் போவுது ரண்டாவது பேத்தி. காலம் கெட்டு கிடக்கு”

  எண்பது வயசானவன் தனக்குள்ளாகச் சிரித்துக்கொள்வது போல் காணப்பட்டான். மொட்டய்யரின் அக்காளின் நினைவும் தன்னுடைய இளம் பருவமும் நினைவுக்கு வருவதுபோல அவன் கண்கள் ஒளிவிடுவதுபோல் காணப்பட்டன.

  “காலம் எப்பதாண்டாகெடலே தூமிகுடிச்ச பயலே” என்று மேலு நினைத்துக் கொண்டே - 

  (ஆசிரியர் ஐயா அவர்களுக்கு வணக்கம். புதுக்கதை எனக்கு எழுத முடியவில்லை என்று என் தோல்வியை ஒப்புக்கொள்ளுகிறேன். அதனால் கதையை மேலும் கொண்டுபோக முடியவில்லை. மன்னிப்புக் கேட்டுக்கொண்டு இத்துடன் முடித்துக்கொள்கிறேன். ஆரம்ப முயற்சி கடைசி முயற்சியாகவும் போய்விட்டது பற்றி நீங்கள் வருத்தப்பட வேண்டாம்)
சிவாஜி, அக்டோபர் 1972.
மறுபிரசுரம், சதங்கஈ, ஜூன் 1973.
•••

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
12.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...