Sunday, April 19, 2020

*காலம் பறித்துக் கொண்ட நல்ல படைப்பாளி *சுப்பிரமணியராஜூ

*காலம் பறித்துக் கொண்ட நல்ல படைப்பாளி *சுப்பிரமணியராஜூ *
————————————
நான் விரும்பும் எழுத்தாளர்களில் சுப்பிரமணிய ராஜூ ஒருவர்.  சுப்பிரமணிய ராஜூ, பாலகுமாரன், மாலன் போன்றவர்கள் அந்தக் காலத்தில் நெருங்கிய நண்பர்கள். அவருடைய படைப்புகள்  சமகாலத்து  சமூக அக்கறையும்  மனசாட்சியின் நெருக்கடியில் தவிக்கும் தற்போதைய சமுதாயத்தில் உள்ள சிக்கல்களை தன் படைப்புகளில் விவரிப்பார். இவருடைய இயற்பெயர் விசுவநாதன். புதுவையில் பிறந்து டி.டி.கே நிறுவனங்களில் பணியாற்றினார்.   இவருடைய 39 வயதிலேயே டிசம்பர் 1987ல் நந்தனம் சிக்னல் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தது எங்களைப் போன்ற பலரை அன்றைக்கு வேதனைப்படுத்தியது. சுப்பிரமணிய ராஜு  இருந்திருந்தால் எவ்வளவோ படைப்புகளும் புதினங்களுன்  நமக்கு கிடைத்திருக்கும். யாருக்கும் உதவ வேண்டுமென்றும், நண்பர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் முதல் மனிதராக இருப்பார். வெறும் தியரி, கோட்பாடாக இல்லாமல் நேர்மையான மனித நேயம் ராஜூவிடம் இருந்தது. இவர் ஒரு emotional personality. பிரபஞ்சனும் இவருக்கு நெருக்கமானவர். ஏதோ ராஜூவின் நினைவுகள் இன்றைக்கு வந்தது. ஜெயகாந்தனுடைய ஆழ்வார்பேட்டை சபையில் இவரும் அடக்கம். இவரைப் பற்றி விரிவான பதிவு எழுத வேண்டும். மாலன் திசைகள் நின்றபோதும் ராஜூவுக்கு வருத்தம் உண்டு.  ராஜூ போன்ற  நல்லுள்ளங்களுக்கு  ஏன் குறுகிய  ஆயுளை இந்த இயற்கை அளிக்கிறது.




“யாருக்குமே நான் போகும் வழி புரியவில்லை அல்லது பிடிக்கவில்லை. முன்னால் போன மாடுகளுக்குப் பின்னால் தொடரும் மாடுகள் செக்கு மாடுகள். அந்த மாட்டுத்தனம் என்னிடம் இருந்து விலகிவிட்டது. எப்போதோ நான் இந்தத் தொடர்ச்சி வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டேன். இப்போது மறுபடி போய் அங்கு சேர்ந்து கொள்ள முடியாது. மந்தையில் இருந்து விலகின மாடு வீடு திரும்பாது.”

- ‘இன்று நிஜம்’ குறு நாவலிலிருந்து

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
18.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...