Wednesday, April 15, 2020

கிராவின்_கோபல்லபுரத்து_மக்கள்

#கிராவின்_கோபல்லபுரத்து_மக்கள் 
———————————————

கோபல்ல கிராமத்தின் தொடர்ச்சியே கோபல்லபுரத்து மக்கள் கரிசல்காட்டு  
கி. ராஜநாராயணன் அவர்களின் எழுத்தே தனி பாணியில் தான் இருக்கும் என்பது நான் சொல்வதை விட வாசித்து பார்த்து தெரிந்து கொள்வது தான் . 

 கோபல்ல கிராமம் புத்தகம் காடாய் வனாந்தரமாய்இருந்தகள்ளிக்காடுகளையும் முள்ளுக்காடுகளையும் அழித்து நாடாக்கிய கதையை தன் பாணியில் சொன்ன கிராஅவர்கள்வெள்ளைக்காரன் வந்ததோடுநிறுத்திகொண்டு.கோபல்ல



புரத்து மக்களில் அதன்தொடர்ச்சியினை முடித்துஇருக்கிறார்.கதைக்களம்காதலில் தொடங்கி நாட்டு சுதந்திரத்தில் வந்து  முடித்து வைத்துள்ளது. 

கோபல்ல புரத்து மக்களில் இரண்டு பாகங்கள் முதல் பாகத்தில் காதல் கதைக்களத்தை புகுத்தி கொண்டு இரண்டாம்   பாகத்தில்  சுதந்திர தாகத்தை  திணித்து கதையை நல்ல நகர்த்திய விட்டார். 
 
"முதல் பாகம்" கிட்டப்பனுக்கும் அச்சந்திலுவுக்கும் இடையே ஏற்பட்ட காதலும் காதலில் தொடங்கி மோதலில் முடிந்த இரு குடும்பத்திற்கிடையே பகையால் கிட்டப்பனும் அச்சுந்திலுவும் பிரிந்து.  அதனால் கிட்டப்பன் வேறு மனம் முடித்தாலும் அவ்வளவு இனித்ததாக இல்லைவாழ்வும் ,இருந்தும் அவ்வாழ்வை விடுத்து ஓர் வேப்பமர நிழலில் இருவரையும் இணைத்து வைத்து கொண்டார் எப்படியும் அந்த காதலர்களை கடைசியில்  சேர்த்து வைத்து விட்ட   வாழ்வினை  எடுத்து உரைத்த கிரா. 

" இரண்டாம் பாகத்தில்"தன் கரிசல் காட்டு பூமியில் இளைஞர்கள் மத்தியில்   ஏற்பட்ட  சுதந்திர தாகத்தினையும் அதுவே பெரியவர்கள்  வரை ஊடுருவியதையும். 

அப்போதைய தேசியத்தலைவர்களின் ஒற்றுமையின்மையையும்  அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார். அதுவும் 
 எவ்வளவு எளிதான கரிசல் பூமியின் வட்டார வழக்கு மொழியில் என்பதை ஒரு வார்த்தையில் சொல்லி விட முடியாது படித்தாலொழிய 
பக்கம் பக்கமாய் சொன்னாலும் தீராது. 

 முழுமையாக வாசிப்பவர்கள்  கோபல்ல கிராமம்(வாசகர் வட்டம் 1976ல் வெளியானது பின் அகரம்), கோபல்லபுரத்துமக்கள் (1990ல் ஆனந்த
விகடன்-1991ல் சாகித்திய அகடமி விருது பெற்றது),  அந்தமான் நாயக்கர் (தினமணிக்கதிர்) என  மூன்று தொகுதிகளையும் ஒரு சேர வாசித்து முடித்தால் அதன் ரசனை குன்றாமல் இருக்கும்.

கிராவின் சிறுகதைகள்75கதைகளுக்கு மேல் ஆகும். கி .ராஜநாராயணன் அவர்களை ஒரு சகாப்தம் என்று சொல்லலாம் .அவர் என்றும் முறுக்கோடு உள்ள தெளிவோடு தனித்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு "நிகழ்வு"(லெஜன்ட் ). அவர் நூற்றாண்டின் மிகப் பெரும் நிகழ்வு.
கரிசல்காட்டு வட்டாரக்கதைகள் இவரால் பெயர் பெற்றது .அந்த நாட்டு மொழியில் அந்த மக்களின் மொழியில் அற்புதமாகஎழுதிஇருக்கிறார் .ஒவ்வொன்றும் அருமை .கதவு என்ற கதையும் தொண்டு என்ற கதையும் மனதைவிட்டு அகலாது என்றும். கிராவின்இடைசெவல் கிராமத்தைசார்நதமுனைவர்பட்டத்திற்காக டெல்லி  பல்கலைக் கழக மிரான்டா கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த தமிழ்ப் பேராசிரியை டாக்டர் விஜயலட்சுமி ராஜாராம்.(ராஜாராம் டில்லி அகில இந்திய வானொலியில் சரோஜ் நாராயணசாமி காலத்தில் கணீர் குரலில் 1960-70 களில்செய்திகளைவாசித்தவர்)
ராஜநாராயணன் அவர்களின் நாட்டுப்புறக்கதைகள்   அதில் காணப்படும் செக் முதலானவை குறித்து சிறப்பு  ஆய்வு செய்து வைத்திருப்பார். அதை படிக்கும் உயர்ந்த தமிழில் இலக்கண தமிழில் ஆய்வுக்கட்டுரை ஆகும்.

கரிசல் காட்டுப் பகுதி மக்கள் வெக்கை குடிப்பவர்கள.இவர்களுக்கு எந்த வித சுக வாழ்வு சம்பந்தமும் கிடையாது. விவசாயிகள் தினம்தோறும் வானத்தை பார்த்து மானத்தை காப்பவர்கள். அப்படிப்பட்ட கரிசனை எல்லா பகுதியும் மக்களின் உணர்வுகளை தின பாடுகளை தனது வெற்றியாக மொழியால் உள் உணர்வால் உலகிற்கு காட்டியவர் கி ரா.இவரை பின்பற்றியே கரிசல் நில கதைகளை  பூமணி , எஸ்.ராம கிருஷ்ணன்,கோணங்கி, மேலாண்மை பொன்னுசாமி தமிழ் செல்வன், லட்சுமண பெருமாள்,முதலான பலர் எழுத்தாளர்கள் கதை எழுதினார்கள். கு.அழகிரிசாமி,கிராவும்  பால்யகால நண்பர்கள் .இருவருமே சாகித்திய அகாடமி விருது பெற்றவர்கள்.
மண்ணையும் அதில் வாழும் மனிதர்களையும் எழுதுவது அத்தனை எளிதல்ல .ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா எழுத்தாளர்களுக்கு கிடைத்துள்ள உலக அங்கீகாரம் போல கி ராவுக்கு கிடைக்கவில்லை .புதுவை பல்கலைக்கழகம் துணைவேந்தர் வேங்கிட சுப்பிரமணியம் இவருக்கு அளித்துள்ள visiting Professor என்ற பதவிபோற்றத்தக்கது .பள்ளிக்கூடம் என்றாலே தள்ளி போனவர் இவர். பள்ளியில் படித்து கல்லூரியில் படித்து வந்து இவரிடம் பயின்ற மாணவர்களின் தொகையோ எண்ணி முடியாது. வெளிய தீபங்கள் போல துல்லியமாக ஆச்சரியம் உண்டாக்கும்.கரிசல் எழுத்துக்கு இவர் பீஷ்மர் . புது வட்டார  எழுத்தாளருக்கு  இவர்துரோனாச்சாரியார்.

தேயிலை ஊருக்குள்ளே எப்படி வந்து எல்லோரையும் ஆட்கொண்டது என்று இவர் தெளிவாகவும் விளக்கமாகவும் அந்தகால வாழ்க்கையை  எழுதியது பிரமிக்கத்தக்கது.  அதேபோல கழுவேற்றுதல் என்கிற ஒரு நிகழ்வை சரித்திரத்தை  இவர் கதை மூலமாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

கதவு மற்றும் கோபல்லபுரம் போன்ற பல கிராவின் படைப்புகள் ஆங்கிலம், பிரெஞ்சு,ஹிந்திமொழியில்மொழிபெயர்க்கப்பட்டுள்ளது .பலராலும் பாராட்டப் பட்டுள்ளது .ஒரு ஏழை விவசாயி கடன் வாங்கி பட்ட அவலநிலையை அரசின் கெடுபிடி தன்மையை அங்கதம் கலந்து சொல்லியிருக்கும் விதம் சிறப்பாக இருக்கும்.

நாட்டுப்புறக்கதைகளைச் போத்தையா, பாரதாதேவி, கழினியூரான்ஆகியருடன் சேர்ந்து  சேகரித்து ,அது தனிவகை இலக்கியம் என்று பல ஆண்டுகால அவரின் முயற்சி தற்பொழுது ஆயிரம் பக்கத்திற்கு மேலான புத்தகமாக வெளிவந்துள்ளது .
கரிசல் வட்டார சொற்களைத் தொகுத்து அகராதி உருவாக்கியிருக்கிறார் .

கடித இலக்கியம் என்ற வகையை மேம்படுத்தியது அவரது கடிதங்கள். 
கு. அழகிரிசாமி க்கும்  நண்பர்களுக்கும் அவர்கள் எழுதிய கடிதங்கள் ஆழமான இலக்கியத் தன்மை கொண்டது . எழுதும்பொழுது  கிராவின் வழியே கரிசல் கிராமங்கள தனது வாழ்க்கையை எழுதிப் பாதுகாத்து வைத்துக் கொண்டு விட்டன.

தொண்டு  என்கிற கதை குறித்து ஒரு அயல் நாட்டவர்; ஒரு ஆங்கில பேராசிரியருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது  எனது நாட்டுப்புறக்கதைகள் அக்கறை கொண்டவர் இங்கே உள்ள நாட்டுப்புறக் கதைகளை ஆங்கிலத்தில் புத்தகமாக கொண்டு வந்திருப்பவர். அவர் சொன்னார் வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு அம்மையார் சொன்னதாக ஒரு ஒரு தகவல்.
 
இத்தாலிய நாட்டில் ஏதோ ஒரு பகுதியில் அமோகமாக பால்சுரப்பு கொண்ட பெண் மக்கள் இருப்பதாகவும், தங்களுடைய வீடுதேடி வயிற்றுப் பசியோடு வருகிறவர்களுக்கு ,தர உணவு இல்லாத போது மட்டும் தம் பெருத்த மார்பக அமிர்தத்தை உண்டு பசியாறி ட அனுமதிப்பார்களாம்.* *இதைப்பற்றி அங்கே நாட்டுப்புறக்கதைகள் இருக்கிறதாம் .வெளி ஆட்களுக்கு கூச்சமும் இல்லாமல் தனது பருத்த பெருத்த மார்பின் மூலமாக பசி ஆற்றும் தன்மையை மெய்சிலிர்க்க வைக்கும் என்ற ஒரு உண்மை நிகழ்ச்சி .இந்த தகவலை சொல்லிய அந்த ஆய்வாளர் அம்மையார் வயிற்றுப் பசி தீர மனமுவந்து தினம் அமுதம் தந்த பெண்ணை போல உடல் பசிதீர தன்னையே தந்த நடப்பு பற்றிய கதை எங்கேனும் இருக்கிறதா என்று கேட்டாராம் .அதற்கு அவர் சொல்வார் அதிதி உபசரிப்பு நம்ம நாட்டுல உண்டு.பெற்ற பிள்ளையையே அறுத்துக் கறி சமைத்து படைத்ததாக இருக்கு .அதுக்கு மேல வயிற்றுப்பசி நீங்க சொல்றது கீழ் வயிற்றுப் பசிக்காக தன்னையே தந்து தவம் செய்ததாக நாட்டுப்புறக்கதைகள் உண்டா என்று  கேட்டார் .ஒரு நடப்பு இருப்பதாகவும் அது தன் மனதை பாதிப்பதாக கதையை வடிவமாக  அது முயற்சித்து தொண்டு என்கிற  கதையாக  இவர் படைத்திருப்பார்.  அதேபோல ஐரோப்பாவில் ஒரு இத்தாலி சிறுகதை இருப்பதாகவும் அவர் சொன்னாராம்
 இவரது கதையில் இரண்டு கதையில் வருகின்ற புள்ளிகளை இரக்கத்தினால் தன்னை தானம் செய்பவள்.
தொண்டு கதையில்,காமம் என்ற பெயருடைய புள்ளிகளை யாருக்கும் சொந்தமில்லை. எல்லோருக்குமே ஊரில் ஒருவகையில் நெருக்கமான அவள்.பசி என்று போனால் வயிறு நிரப்பி அனுப்பி விடுவாள் .அது எந்த பசியாக இருந்தாலும் . ஊர் பலவிதமாக பேசினாலும் அவளிடம் பசியாற செல்லாத மக்கள் இல்லை .ஒரு முறை போலீசார் அந்த கிராமத்திற்கு படையெடுத்தபோது அவர்களை தடுத்து நிறுத்தி  அவர்களின்  பசியாற்றி திசைமாற்றி ஊரை காப்பாற்றினால் என்று கதை இருக்கும். இந்த கதை குறித்து தான்  மேற்படி தனது சிறப்பாக அவர்எழுதி வைத்திருப்பார் .

கரிசல் காட்டுக் கடிதாசி தொடரும் 1980களில் ஜீனியர் விகடனில். தொடராகவும் பல வாரங்கள் வந்தன.
கரிசல் பூமியின் காலச்சாரத்தை எடுத்து
சொன்னது.இப்படி இவரின் கதைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம் .
#ksrpost
15-4-2020.

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...