Thursday, April 23, 2020

சேக்ஸ்பியர் -#பிறந்த_நாள்_இன்று #Shakespeare

#சேக்ஸ்பியர் -#பிறந்த_நாள்_இன்று
#Shakespeare
————————————————
வில்லியம் சேக்ஸ்பியர் படைப்பாற்றலை
அகிலம் கொண்டடுகின்றது. English poet, dramatist, and actor often called the English national poet and considered by many to be the greatest dramatist of all time.

Born: April 23, 1564, Stratford-upon-Avon baptized April 26, 1564,



Died: April 23, 1616, Stratford-upon-AvonCause of Death: Unknown






Height: 5'6" (1.68m)
Spouse: Anne Hathaway (m. 1582-1616)
Parents: John Shakespeare
Children: Susanna Hall, Judith Quiney, Hamnet Shakespeare
Movies & TV Shows
Biography of the Millennium: 100 People - 1000 Years

சேக்ஸ்பியர், குறைந்தது 36 நாடகங்கள் இயற்றினார். இவற்றில் ஹாம்லெட் (Hamlet), மாக்பெத் (Macbeth), லியர் மன்னன் (King Lear), ஜூலியஸ் சீசர் (Julius Caeser), ஒத்தல்லோ (Othello), அந்தோனி கிளியோபாட்ரா (Antony Cleopatra) ரோமியோ ஜீலுயட் (Romeo Juliet)போன்ற பல அழியாக் காவியங்களும் அடங்கும். இவை தவிர, அற்புதமான 154 ஈரேழ்வரிப் பாக்களையும் (Sonnets) சில நெடிய கவிதைகளையும் அர்ப்பனித்துள்ளார்.

சில நேர்வுகளில், கலைப்படைப்புகள், ஏறத்தாழ வெளிப்படையான தத்துவப் பொருளை உள்ளடக்கியிருக்கின்றன. இத்தத்துவம், மற்றத் துறைகளில் நமது மனப் போக்குகளில் தாக்கம் ஏற்படுத்தலாம். இசை, ஓவியம் போன்றவற்றை விட இலக்கியப் படைப்புகளில் இது அடிக்கடி நிகழ்கிறது. எடுத்துக்காட்டாக, ரோமியோ ஜூலியத் நாடகத்தில் (அங்கம் III, காட்சி 1) இளவரசன் வாய்வழியாக, கொலையிற் கொடியரைக் கொல்லற்க; அவர் நாண நன்னயம் செய்திடுக என்று ஷேக்ஸ்பியர் கூறும் போது, ஒரு தத்துவக் கோட்பாட்டை அவர் தெரிவிக்கிறார். இந்தக் கோட்பாடு, மோனாலிசா ஓவியத்தைப் பார்ப்பதை விட அதிக அளவில் அரசியல் மனப்போக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

இலக்கியவாதிகள் அனைவரிலும் தலைசிறந்தவராக சேக்ஸ்பியர் விளங்குகிறார் என்பதை மறுப்பதற்கில்லை. சாசர், வர்ஜில், ஹோமர் ஆகியோரின் படைப்புகளை, அவை பள்ளிப் பாட நூல்களாக இருந்தால் மட்டுமே, ஒருசிலர் இன்று படிக்கின்றனர். ஆனால், சேக்ஸ்பியர் நாடகங்கள் இன்று நடந்தாலும், அரங்கம், நிரம்பி வழிகிறது. சேக்ஸ்பியரின் சொல்லாட்சித் திறன் ஈடு இணையற்றது. அவரது நாடகங்களைப் பார்க்காதவர்களும், படிக்காதவர்களுங்கூட அவரது நாடகங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டுவதை அடிக்கடி காண்கிறோம். மேலும், அவரது செல்வாக்கு இன்றிருந்து நாளை மறையும் ஒரு போலி பகட்டு அன்று என்பது தெளிவு, அவரது படைப்புகள், நானூறாண்டுகள் வாசகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் மகிழ்வூட்டியிருக்கின்றன. அவை ஏற்கெனவே காலத்தை வென்று நிற்கின்றன. எனவே, சேக்ஸ்பியரின் படைப்புகளுக்கும் இன்னும் பல நூற்றாண்டுகள் செல்வாக்கு தொடர்ந்து நீடிக்கும் என்று கருதலாம்.

சேக்ஸ்பியரின் தந்தை ஜான் ஒரு காலத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர். அவர் நொடித்துப் போய் வறுமையில் வீழ்ந்தார். சிறுவன் வில்லியம் மிகுந்த வறுமைச் சூழலில் வளர்ந்தான். எனினும், அவன், ஸ்டிராட் ஃபோர்ட் இலக்கணப் பள்ளியில் சேர்ந்தான்; அங்கு அவன் லத்தீனும், இலக்கியமும் கற்றான்.

வில்லியம் தனது 18 ஆம் வயதில் ஆனிஹத்தாவே என்ற இளம் பெண்ணுடன் நட்புக் கொண்டான்; அவள் கருவுற்றாள். அவளையே முறைப்படி மணந்து கொண்டான். சில மாதங்களில், அவளுக்குக் குழந்தை பிறந்தது. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அவள் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்! ஆகவே, 21 வயதை எட்டுவதற்கு முன்பே, வில்லியம், மனைவியையும் மூன்று குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டியிருந்தது.

அடுத்த ஆறு ஆண்டுகளில் அவரது நடவடிக்கைகள் பற்றியோ, அவர் வாழ்ந்த இடங்கள் குறித்தோ, எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால், 1590 களில், லண்டனில் ஒரு நடிகர் குழுவின் ஓர் உறுப்பினராக அவர் மீண்டும் தோன்றுகிறார். அவர் ஒரு வெற்றிகரமான நடிகராக விளங்கினார்! ஆனால், விரைவிலேயே நாடகங்களும், கவிதைகளும் எழுதுவதில் அவர் ஈடுபாடு கொண்டார். 1598-ம் வாக்கில் வாழ்கின்ற அல்லது இறந்துபோன ஆங்கில எழுத்தாளர்கள் அனைவரிலும் தலைசிறந்த எழுத்தாளர் என்று போற்றப்பட்டார். சேக்ஸ்பியர் லண்டனில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் தங்கியிருந்தார். இந்தக் கால அளவின்போது அவர் குறைந்தது 36 நாடகங்களை எழுதினார். 154 ஈரேழ் வரிப் பாடல்களை இயற்றினார். ஒரு சில ஆண்டுகளில் அவர் பெரும் பணக்காரர் ஆனார். ஸ்டிராட்ஃபோர்டில் 1597 இல் புதிய மாளிகை (New Palace) என்னும் விலையுயர்ந்த இல்லத்தை வாங்கினார். அவருடைய குடும்பத்தினர் எப்போதும் ஸ்டிராட் ஃபோர்டிலேயே இருந்து வந்தனர். அவர்களுக்கு அவர் தொடர்ந்து ஆதரவளித்து வந்தார்.

அவர் எழுதிய சிறந்த நாடகங்களில் எதனையும் அவர் வெளியிடாமலிருந்தது விசித்திரமாக இருக்கிறது. ஆனால், இந்நாடகங்களின் வாணிகப் பெருமதியை நன்கறிந்திருந்த, பழி பாவங்களுக்கு அஞ்சாத அச்சக உரிமையாளர்கள், இந்நாடகங்களில் பாதியைத் திருட்டுத்தனமாக அச்சிட்டனர். இந்தத் திருட்டுப் பதிப்புகளை பெரும்பாலும் திரித்துரைப்பனவாக இருந்தபோதிலும், சேக்ஸ்பியர் அவற்றில் தலையிட முயலவில்லை.

சேக்ஸ்பியர் தமது 48 வயதில் (1612) எழுதுவதிலிருந்து திடீரென ஓய்வு பெற்றார். ஸ்டிராட் ஃபோர்ட் திரும்பி வந்து மனைவி மக்களுடன் வாழலானார். அவர் அங்கு 1616 ஏப்ரல் மாதம் இறந்தார். அவர் தேவாலய முற்றத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார். இவருடையதெனக் கருதப்படும் கல்லறையின் மேலுள்ள கல்லில் இவருடைய பெயர் பொறிக்கப்படவில்லை. ஆயினும், சிறிது காலத்திற்குப் பிறகு, அருகிலிருந்த சுவரில் ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது; தாம் இறப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு, அவர் ஒரு விருப்புறுதி ஆவணம் (Will) எழுதினார். அதில் அவர் தமது சொத்துக்களைத் தம் மூத்த மகள் சூசன்னாவுக்கு (Susanna) உடைமையாக்கியிருந்தார். சூசன்னாவும், அவளது சந்ததியினரும், அவர்களில் கடைக் குட்டி, 1670இல் இறக்கும் வரையில், புதிய மாளிகையிலேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தனர்

லண்டனில் வாழ்ந்த காலத்தில், யாருக்கும் தெரியாமலேயே வாழ்ந்தார். சேக்ஸ்பியர் லண்டனில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் (1592-1612) வசித்தார் எனக் கருதப்படுகிறது. ஆனால், இந்த 20 ஆண்டு காலத்தில், பெரிய நடிகரும், நாடகாசிரியருமான இவரை எவரும் நேரில் பார்த்ததற்கான சான்று ஒன்றுகூட இல்லை. வில்லியம் சேக்ஸ்பியர் என்பது 17 ஆம் ஆக்ஸ்ஃபோர்ட் கோமகன் எட்வர்ட்-டி-வேர் தமக்கு வைத்துக் கொண்ட ஒரு புனை பெயர் என்பதைப் பெரும்பாலான சான்றுகள் வலியுறுத்துகின்றன.

சேக்ஸ்பியரின்Will பற்றிய சிக்கல் எழுகிறது. இந்த மூல ஆவணம் இன்றும் உயிர் வாழ்கிறது. இது மூன்று பக்கங்கள் நீளமுடையது. இதில் அவரது சொத்துக்கள் விவரமாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்தச் சொத்துகளில் பல குறித்த நபர்களுக்கு உரித்தாக்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் எந்த இடத்திலும் அவரது கவிதைகள், நாடகங்கள், எழுத்துப்படிகள், எழுதப்பட்டு வரும் நூல்கள், இலக்கிய உரிமைகள் எதனைப் பற்றியும் குறிப்பிடவில்லை. அவரது சொந்த நூல்கள் அல்லது ஆய்வுரைகள் பற்றியும் எந்தக் குறிப்பும் இல்லை. அவரது நாடகங்களில் குறைந்தது 20 நாடகங்கள் அப்போது அச்சிடாமலிருந்த போதிலும் வெளியாகாமலிருக்கும் அவரது நாடகங்களை வெளியிடுவது குறித்து எவ்விதக் குறிப்பும் இல்லை. அவர் தம் வாழ்நாளில், ஒரு கவிதையை அல்லது நாடகத்தை எழுதியதற்கான குறிப்பு எதுவுமில்லை. பள்ளிக்குச் சென்றிராத, எழுத்தறிவற்ற ஒரு வணிகர் எழுதிய ஒரு விருப்புறுதி ஆவணமாகவே அது அமைந்துள்ளது.

புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் ஒருவர் இறந்தால் அவருக்கு ஆடம்பரமான ஈமச் சடங்குகளை நடத்துவதும், கவிஞர்கள் நீண்ட கவிதைகள் இயற்றிப் புகழஞ்சலி செலுத்துவதும், பெரு வழக்கமாக இருந்து வந்த ஒரு காலத்தில், 1616 இல் சேக்ஸ்பியர் காலமானபோது அவருக்கு அஞ்சலி செலுத்தாமல் அறவே விட்டுவிட்டது வியப்புக்குரியது. பிற்காலத்தில் வில்லியம் வியந்து போற்றுபவராகவும் அவருடைய நெருங்கிய நண்பராகவும் விளங்கிய தன்னைக் கூறிக்கொண்ட பென் ஜான்சன்கூட, சேக்ஸ்பியர் இறந்தபோது இரங்கல் தெரிவிக்கவில்லை.
இப்படி சேக்ஸ்பியரை பற்றி செய்திகள் சில....
புகழ்பெற்ற எழுத்தாளர்கள் சிலரின் படைப்புகளை இலக்கியத் திறனாய்வாளர்கள் இகழ்ந்துரைப்பதுண்டு. ஆனால்,சேக்ஸ்பியருக்கு அந்த நிலைமை ஏற்படவில்லை. அவருடைய படைப்புகள்,  அனைவராலும்  பாராட்டப் பெற்றன.

இலக்கியவாதிகளின் வாழ்க்கை வரலாற்றில் இன்று போல் அன்று யாரும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை.
சேக்ஸ்பியரின் வாழ்க்கை வரலாற்றை முதலில் 1709 இல் வில்லியம் ரோவ் (Willaim Rowe) என்பவர் எழுதினார். அந்த நூல் வெளிவருவதற்குள், உண்மையை அறிந்தவர்கள் மாண்டு மறைந்து போனார்கள்; சேக்ஸ்பியர் பற்றிய சில கட்டுக்கதைகளையும் நம்பிக்கையுடன் ஏற்கப்பட்டு விட்டது.

Shakespeare occupies a position unique in world literature. Other poets, such as Homer and Dante, and novelists, such as Leo Tolstoy and Charles Dickens, have transcended national barriers, but no writer’s living reputation can compare to that of Shakespeare, whose plays, written in the late 16th and early 17th centuries for a small repertory theatre, are now performed and read more often and in more countries than ever before. The prophecy of his great contemporary, the poet and dramatist Ben Jonson, that Shakespeare “was not of an age, but for all time,” has been fulfilled.

#ksrpost
23-4-2020.

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...