Wednesday, June 1, 2016

தெற்கத்தி கரிசல் இலக்கிய பதிவு

தெற்கத்தி கரிசல் இலக்கிய ஆளுமைகளை குறித்து திரு. இளசை அருணாவின் இரண்டு தொகுதிகளை மதுரை மீனாட்சி பதிப்பகம் 10 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. கி.ரா. அவர்கள் இது குறித்து இன்றைய நிலையோடும், புதிய பதிவுகளோடு ஒரு தொகுப்பு வெளிவர விரும்புகிறார். இது தொடர்பாக திரு. கழனியூரான், திரு. நாரம்புநாதன், திரு. உதயசங்கர் அவர்களிடம் ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளது. கரிசல் இலக்கிய புள்ளிகளின் விவரங்கள் இருப்பின் திரு. கழனியூரானிடமோ, திரு. நாரம்புநாதனிடமோ அல்லது எனக்கோ அனுப்பி வைத்தால் உதவியாக இருக்கும். இது ஒரு கூட்டு முயற்சியான பதிவாகும். அனைவரும் கைகொடுக்க வேண்டுகின்றேன்.

கி.ரா. இதைப் பற்றி சொல்லி 6 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. என்னுடைய சோம்பேறித்தனத்தால் தாமதத்துக்கு மேல் தாமதம். இந்த பணியை 2017 க்குள் முடித்து தொகுத்து வெளியிடவேண்டிய பொறுப்பு உள்ளது. கரிசல் இலக்கிய ஆர்வலர்கள் இது குறித்து தங்களிடம் உள்ள தரவுகளை அனுப்பி வைத்தால் இந்தப் பணிக்கு மேலும் ஊக்கத்தைத் தரும்.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...