Saturday, June 4, 2016

விளக்கேற்றி வைக்கிறேன்.....

1971ல் வெளியான மதுரை திருமாறனின் சூதாட்டம் திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் அவர்களுடைய விளக்கேற்றி வைக்கிறேன் என்ற பாடல் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகும். ஒருமுறை கவிஞரும், மணலி ராமகிருஷ்ண முதலியாரும் ஆந்திராவில் இருந்து திரும்பும்போது இந்தப் பாடலை காரில் கேட்டுக்கொண்டு வந்தோம். அப்போது கவிஞர் என்னுடைய நலனில் அக்கறையோடு சில செய்திகளை சொல்லி திடீரென நெல்லூரில் அவருக்கு தெரிந்த நண்பர் வீட்டுக்கு அழைத்து சென்றபோதுதான் அறிந்தேன் அவர்கள் என்னுடைய உறவினர்கள் என்று. இன்றைக்கும் இந்தப் பாடல் வரிகளை கேட்கும்போது கவிஞர் கண்ணதாசனின் நினைவு நெஞ்சில் ஆடும். ஒரு இளைஞனின் திருமண வாழ்க்கை துவங்குவதும், இல்லத்தரசி அமைவதும் குறித்து வெளிப்படுத்துகின்ற பாடல் வரிகளை மறக்கவே முடியவில்லை. இப்படத்தில் ஜெய்சங்கரும், கே.ஆர். விஜயாவும் நடித்த காட்சிகள் இன்றைக்கும் மலரும் நினைவுகளாக உள்ளன.





விளக்கேற்றி வைக்கிறேன்
விடிய விடிய எரியட்டும்..
நடக்கப் போகும் நாட்களெல்லாம்
நல்லதாக நடக்கட்டும்...

விளக்கேற்றி வைக்கிறேன்

மஞ்சளிலிலே நீகொடுத்தாய் மங்கலம்... இந்த
மஞ்சத்திலே நான் அறிவேன் மந்திரம்...
நெஞ்சத்திலே பூசிவிடும் சந்தனம்... அதைக்
கொஞ்சட்டுமே நீகொடுத்த குங்குமம்... உனைத்
தஞ்சமென தழுவிக்கொண்டது பெண்மனம்... இனி
கொஞ்சமல்ல கோடி கொள்ளும் உன்மனம்!..

விளக்கேற்றி வைக்கிறேன்

கருணைமிகு மாரியம்மன் துணையிலே.. நல்ல
கல்வியுண்டு செல்வமுண்டு மனையிலே
பொறுமையுடன் பாசமுண்டு பெண்ணிலே... அதன்
பூஜையெல்லாம் எதிரொலிக்கும் விண்ணிலே... என்
வீடுஎன்பதும் கோயில் என்பதும் ஒன்றுதான்.. நான்
வாழ்வு என்பது காண வந்தது இங்குதான்!...

விளக்கேற்றி வைக்கிறேன்

பருவங்கண்டு ஓடிவரும் மழையிலே... நல்ல
பழங்களுண்டு நெல்லுமுண்டு வயலிலே..
கணவனெனும் மேகம் தந்த மழையிலே.. இளம்
மனைவிடம் மழலை வரும் மடியிலே... நான்
காதல் தெய்வம் காண வேண்டும் பண்பிலே.. நீ
காவல் தெய்வம் ஆகவேண்டும் அன்பிலே..

விளக்கேற்றி வைக்கிறேன்

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...