Wednesday, June 22, 2016

Srilankatamils issue

காற்றில் பறக்கும் சிறிலங்காவின் வாக்குறுதிகள் : ஐ.நாவில் பன்னாட்டு நிபுணர் குழு Monitoring Accountability Panel (MAP)   தெரிவிப்பு !

ஐ.நா மனித உரிமைச்சபைக்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றவில்லை என பன்னாட்டு நிபுணர் குழு ஐ.நா மனித உரிமைச்சபையில் குற்றஞ்சாட்டியுள்ளது.

சிறீலங்காவின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளையும், நடைமுறைப்படுத்தலைக் கண்காணிக்கும் வகையில் நாடுகடந்த #தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பன்னாட்டு நிபுணர்களை குழுவே Monitoring Accountability Panel (MAP) க்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

சர்வதேச நீதிபதியாகவும், விசாரணை மற்றும் மேல்முறையீட்டு வழக்கறிஞராகவும் இருக்கின்ற ஜெப்றி ரொபர்ட்சன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றிருந்த உப மாநட்டில், கம்போடியாவின் கலப்பு தீர்பாயத்தின் பொறிமுறையில் நீதிமன்றகளின் சிறப்பு விசாரணை மன்றங்களில் பொதுச் சமுதாய நீதி முன்முயற்சிக்கான ஆலோசகராக இருக்கின்ற ஹீதர் ரியான் அவர்களும் பங்கெடுத்திருந்தார்.

சிறிலங்கா தொடர்பிலான தனது வாய்மொழி அறிக்கையினை எதிர்வரும் 29ம் நாளன்று மனித உரிமைச்சபை ஆணையாளர் செயிட் ராட் அல்ஹசேன் அவர்கள் சபையில் முன்வைக்க இருக்கின்ற நிலையில், இந்த பன்னாட்டு நிபுணர் குழுவின் கூட்டம் இடம்பெற்றிருந்தது.

ஐ.நா மனித உரிமைச்சபைக்கு சிறிலங்கா வழங்கியிருந்த நீதிவழங்யிருந்த வாக்குறுதிகளில் காத்திரமான எதனையும் சிறிலங்கா செய்யவில்லை என குற்றஞ்சாட்டியிருந்த இந்த நிபுணர் குழு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி என்பது அனைத்துலக நீதிப்பொறிமுறை ஒன்றின் ஊடாகவே பெற முடியும் எனவும் தெரிவித்திருந்தது.#srilankatamils

No comments:

Post a Comment