தமிழகத்தின் கலாச்சாரத் தலைநகர் மதுரை. ரோம் நகரமும், ஏதென்ஸ் நகரமும் வரலாற்றின் பண்டைய உலக நகரங்களாகும். மாமதுரையும் அதற்கொப்ப ரோம், ஏதென்ஸ் நகரத்துக்கு முந்தைய நகரமாகும். தமிழ் மண்ணின் அடையாளம். தமிழ்நாட்டுப்புற கலைகளுக்கும், வாடிக்கைகளுக்கும் முகவரி. மதுரையின் அருகே அமைந்த அழகர் கோவில் வைணவமும், சைவமும் இணைந்த மலைப்பிரதேசம் ஆகும். பிரம்மாண்டமான அழகர்கோவில் சாலை பற்றி கொத்தமங்கலம் சுப்பு, தில்லானா மோகனாம்பாள் புதினத்தில் எடுத்துச் சொல்வார். எழிலார்ந்த மலையும், காடும் கண்ணை கவர்கின்றன. அழகர் கோவிலின் பெரிய பிரம்மாண்டமான முன்வாயில் பதினெட்டாம் படியார் வாயில் என்று அழைப்பதுண்டு. இதை மூடி வைத்து உரிய பூஜைகளும் நடத்துவதுண்டு. நாட்டுப்புற கலைகளுக்கு அழகர் கோவில் ஊற்றுக்கண்ணாக விளங்குகிறது.
மதுரையைத் தலைநகராகக் கொண்டு காவிரியின் தென்கரையில் திருவரங்கத்தில் அரங்கன் பள்ளிக்கொண்டதிலிருந்து தென்குமரி வரை தென் தமிழகம் என்று தமிழ் பேசக்கூடிய அளவில் இரண்டு மாநிலங்கள் இந்தியாவில் அமைந்தால் என்ன? என என் நட்பு வட்டாரம் விவாதித்தது உண்டு. என்னுடைய தனிப்பட்ட முறையில் இதுவும் சரிதான் என்று படுகிறது. அதற்கு காலம் என்ன பதில் சொல்லப் போகிறதோ? இந்த விவாதம் தமிழ்நாட்டின் பிரபலமான தின பத்திரிகையின் ஆசிரியர், ஓய்வு பெற்ற சென்ன உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி, பத்திரிகையாளர், மதுரையைச் சார்ந்த மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞரும், என நண்பர்களோடு அழகர் கோவில் மேலே உள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றபோது இது குறித்து கடந்த வாரம் விவாதித்தோம். இது சரியா, தவறா என்பது விவாதத்துக்கு உரிய விடயம்.
அழகர் கோவில் மலையில் உள்ள நீர்வீழ்ச்சியில் ஒரு அதிசய செய்தி, குற்றால அருவியைப் போல் இல்லாமல் சற்று இதமான சூடாக நீர்வீழ்ச்சியில் இருந்து நீர் விழுகின்றது. மேற்குத் தொடர்ச்சி மலையைப் போன்று அழகர் கோவிலிலும் இயற்கைச் சூழலைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், பல ஆய்வுகளும் நடத்தப்பட வேண்டும்.

No comments:
Post a Comment