Sunday, June 19, 2016

Sri Lanka Tamils

புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் திட்டத்தை தொடர்கின்றது இந்தோனேசியா
      44 இலங்கை தமிழர்களின் உயிருக்கு ஆபத்து .இதுவரை யாரும் உதவ முன் வரவில்லை.                                   
சீரற்ற காலநிலை மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் படகுப் பயணிகள் சர்வதேச கடற்பரப்பிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இந்தோனசிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது மிகவும் மோசமானது என சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வருகின்றன.

கர்ப்பிணிப் பெண் ஒருவர், பெண்கள் சிறுவர்கள் உள்ளிட்ட நாற்பத்து நான்கு பேர் இந்தப் படகில் பயணித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இந்த படகு இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்பரப்பில் இயந்திரக் கோளாறு காரணமாக தத்தளித்தது.

வெள்ளிக்கிழமை குறித்தப் படகுப் பயணிகளை சர்வதேச கடலுக்கு திருப்பி அனுப்பி வைக்க இந்தோனேசிய அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர் எனினும் சீரற்ற காலநிலை காரணமாக திட்டம் கைவிடப்பட்டது.

புகலிடக் கோரிக்கையாளர்களின் நிலைமை குறித்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சோ அல்லது வெறும் பொறுப்பு வாய்ந்த தரப்புக்களோ இதுவரையில் உத்தியோகபூர்வமாக எவ்வித அறிவிப்புக்களையும் வெளியிடவில்லை.

No comments:

Post a Comment