Thursday, June 2, 2016

கூந்தன்குளம் பறவைகள் காப்பகம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளத்திற்கு சமீபத்தில் சென்றிருந்தேன். இவ்வூர் நாங்குநேரி அருகே உள்ளது. இங்கு பறவைகள் காப்பகம் உள்ளது. 1994 லிலிருந்து பறவைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட இப்பகுதியின் பரப்பு 12933 சதுர கிலோ மீட்டர் ஆகும். இந்த காப்பகத்துக்கு ஆஸ்திரேலியா, ரஷ்யாவின் வடபகுதி மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து 43 இனப் பறவைகள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் வருகின்றன.  இங்கு வளசையாக வருகின்ற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளை ரசிக்க பயணிகள் வருகின்றனர். கூந்தன்குளம், காடான்குளம் என இயற்கையாக விரிந்து பரந்த நீர்ப் பரப்பில் பறவைகளில் பூ நாரைகள் அதிகமாக தென்படுகின்றன. செங்கால்நாரை, கூழைக்கடா, நத்தைகொத்திநாரை உள்ளிட்ட பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூடுகள் கட்டியுள்ளன.

சைபீரியா, மங்கோலியா போன்ற நாடுகளில் இருந்து பட்டைத்தலை வாத்து, ஊசிவால் வாத்து, தட்டை வாயன், செண்டு வாத்து, முக்குளிப்பான், செங்கால் நாரை, மஞ்சள் மூக்கு நாரை, கொக்குகள், கரண்டி வாயன் என நீர்ப் பறவைகள் கூந்தன் குளத்திற்கு ஆண்டு தோறும் வருகை புரிகின்றன

No comments:

Post a Comment