Monday, June 13, 2016

பராசக்தி


திரைப்படத் தணிக்கைக் குழுவில் 1999 வரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்துள்ளேன். அப்பொழுது 1989 என்று நினைக்கின்றேன். தினமணியில் திரைப்படத் தணிக்கை குழுவைப் பற்றி ஒரு கட்டுரை எழுத சில ஆவணங்களை தணிக்கைக் குழு அலுவலகத்தில் தேடியபொழுது, கலைஞர் அவர்களின் பராசக்தி படத்தின் தணிக்கை சென்னை பாரகன் திரையரங்கத்தில் நடந்தது. மணிக்கொடி ஆசிரியர் ஸ்டாலின் சீனிவாசன் அப்பொழுது தணிக்கைக் குழுவின் அதிகாரியாக பொறுப்பில் இருந்தார். இந்தத் திரைப்படத்தை இரண்டு நாட்கள் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்து அதிகமான வெட்டுக்களை பரிந்துரைத்தனர். பெறும் போராட்டத்துக்குப் பிறகுதான் இப்படம் வெளியிடப்பட்டது. இப்பொழுது உள்ளது போல தணிக்கை செய்வதற்கென்று தனியான அரங்கங்கள் அப்பொழுது இல்லை. திரையரங்குகள்தான் தணிக்கைக் குழு அமர்ந்து பகலில் புதியத் திரைப்படங்களுக்கு தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கும். தமிழ்நாட்டில் திரைப்படத் துறையில் தணிக்கை சான்றிதழ் பெற பெறும் சவாலை சந்தித்தது தலைவர் கலைஞரின் பராசக்தி திரைப்படம் ஆகும்.

No comments:

Post a Comment