Tuesday, June 7, 2016

சுவிட்சர்லாந்திடம் பாடம் கற்குமா தமிழகம்?

200 ரூபாய்க்கு விலைபோன தமிழக மக்களும், ஒரு கோடி ரூபாயை நிராகரிக்கும் சுவிஸ் மக்களும்: சுவிட்சர்லாந்திடம் பாடம் கற்குமா தமிழகம்?

குடிமக்கள் அனைவருக்கும் ஒரு குறைந்த பட்ச ஊதியத்தை அரசே அளிக்க வேண்டும் (universal basic income) என்பது ஒரு மிகச்சிறந்த மக்கள்நல அரசுக்கொள்கை ஆகும். ஆனால், இதனை உலகின் எந்த நாடும் இதுவரை செயலாக்கியது இல்லை. 

இந்நிலையில், தனது குடிமக்கள் ஒவ்வொருவருக்கும், மாதம்தோரும் இந்திய மதிப்பில் தலா 1,75,000 ரூபாயும், குழந்தைகளுக்கு தலா 43,000 ரூபாயும் அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த முன்வந்தது சுவிட்சர்லாந்து அரசு.

ஆனால், இன்று நடந்த பொதுவாக்கெடுப்பில் (referendum), ஒவ்வொரு நபருக்கும் ஆண்டுக்கு 21 லட்சம்  ரூபாய் வீதம் - ஒவ்வொரு நபருக்கும் ஐந்தாண்டுகளில் ஒரு கோடி ரூபாய் பணத்தை அரசாங்கமே இலாசமாக கொடுக்கும் திட்டத்தை சுவிட்சர்லாந்து நாட்டு மக்கள் நிராகரித்துள்ளனர். இத்திட்டத்துக்கு ஆதரவாக 22% மக்களும், எதிராக 78% மக்களும் வாக்களித்துள்ளனர்.

"சுவிடசர்லாந்து: ஜன்நாயகத்தின் அடையாளம்"

சுவிட்சர்லாது நாடு நேரடி ஜனநாயகத்தை (Direct Democracy) பின்பற்றும் நாடாகும். அங்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எல்லாம் இல்லை. தேர்வாகும் எல்லா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து ஆட்சி நடத்துகிறார்கள். உலகிலேயே நீண்டகாலமாக நிலையான மக்களாட்சி அரசு நடக்கும் நாடு சுவிட்சர்லாந்துதான். 1848 ஆம் ஆண்டிலிருந்து அங்கு நிலையான ஜனநாயக ஆட்சி நடக்கிறது.

முக்கியமான சட்டங்கள் அனைத்தும் மக்கள் பொதுவாக்கெடுப்பு (referendum) மூலம் உருவாக்கப்படுகின்றன. அரசு கொண்டுவரும் சட்டத்தை தங்களது வாக்களிப்பின் மூலம் செல்லாது ஆக்கும் வலிமை மக்களுக்கு உண்டு. 

ஏதேனும் ஒரு சட்டத்தை எதிர்த்து, ஏதேனும் ஒரு குடிமகன் - சக குடிமக்கள் 50,000 பேரிடம் கையொப்பம் பெற்றுவிட்டால், அரசாங்கத்தின் மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்தி சட்டத்தையே நீக்க முடியும். அதேபோன்று, ஒரு லட்சம் குடிமக்களின் ஆதரவு இருந்தால், யார் வேண்டுமானாலும் புதிய சட்டத்தையே உருவாக்கி அதன் மீதும் பொதுவாக்கெடுப்பு நடத்தலாம். பொதுவாக்கெடுப்பில் வெற்றிபெற்றால் அது சட்டமாகிவிடும்.

----------------------------------

No comments:

Post a Comment