Sunday, June 26, 2016

கங்காரு

தெற்கு ஆஸ்திரேலியாவில் 1985 கால கட்டத்தில் இந்த கங்காரு படம் எடுக்கப்பட்டது. இந்த ஜீவன் உயிருடன் இருக்கின்றதா, இல்லையா என்பது தெரியவில்லை. அதைப் பார்த்தால் சில சமயங்களில் பரிதாபமும், அதன் மீது கருணையும் ஏற்படும். சில நேரங்களில் வேகமாக தத்தி ஓடுவதைப் பார்த்தால் அதனுடைய முயற்சிகளும், பாவனைகளும் நமக்கே சோர்வை நீக்கும். ஈழத்தைச் சேர்ந்த அன்பு நண்பர் இந்தக் காட்சியைக் கண்டு எனக்கு கங்காரு பொம்மையை பரிசாகவும் தந்தார். ஆஸ்திரேலியா என்று நினைத்தாலோ, தொலைபேசியில் அங்கிருந்து யாரும் அழைத்தாலோ இந்த புகைப்படக் காட்சி மனதில் படும்.

கங்காரு பாலூட்டி இனத்தைச் சேர்ந்ததாகும். இவை பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் அதன் அருகில் உள்ள தீவுகளில் காணப்படுகின்றன. இவை நான்கு கால்களைக் கொண்டிருப்பினும் தன் பின்னங்கால்களால் தத்திச்செல்கின்றன. சமநிலை பேணுவதற்குத் தனது வாலைப் பயன்படுத்துகின்றன.  ஒரே தாண்டுதலில் 13 மீட்டர்கள் தூரம் தாண்டும் ஒரே விலங்கினம் இது. இவ்விலங்கின் மடியில் ஒரு பை காணப்படுகிறது. இப்பையில் இவை தங்கள் குட்டியைக் தாங்கிக் கொண்டிருக்கின்றன. குட்டிகள் பால் அருந்துவதற்கான முலையும் இந்தப்பையினுள்ளே இருக்கின்றது.

No comments:

Post a Comment