Thursday, June 2, 2016

பொன்வண்டு

கிராமத்தில் சிறு வயதில் பார்த்த சற்று பச்சையும் பசுமையும் கலந்த பொன்வண்டு இப்போது பார்க்க இயலவில்லை. அதை திருப்பிப் போட்டாலும் குட்டிக்கரணம் போட்டு ரீங்காரமிட்டு சமநிலைக்கு வருவதை பார்க்க வியப்பாக இருக்கும். இந்த பொன்வண்டை பிடித்து தீப்பெட்டிக்குள் சிறிய இலைகளைப்போட்டு அடைத்து வைப்பது உண்டு. மழைக்காலங்களில் இது இயல்பாக மரங்கள், செடிகளின் பக்கத்தில் கிடைக்கும். இது முட்டைகள் வைத்து குஞ்சுகளும் பொறிப்பது உண்டு.  கடந்த 30 ஆண்டுகளாக ரசாயன உரங்களாலும், பூச்சிக்கொல்லிகளாலும் இந்த பொன்வண்டு இனமே அழிந்துவிட்டது. எப்படியாவது ஒரு வண்டாவது பிடித்துத் தாருங்கள் என்று கிராமத்திற்கு சென்றபோது எவ்வளவோ முயன்றும் இந்த பொன்வண்டு கிடைக்கவில்லை. இப்படி ஒவ்வொரு இனங்களையும் ரசாயன உரங்களாலும், பூச்சிக்கொல்லிகளாலும் இழந்து வருகின்றோம். இப்படி எத்தனையோ அரிய இனங்களை இழப்பது சரிதானா? மனித இனம் இதையெல்லாம் சிந்திக்காமல் முன்னேற்றம் என்று பேசிக்கொண்டு வருவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இந்த பொன்வண்டு இனம் தென்கிழக்கு ஆசியாவில் மட்டும்தான் கடந்த நூற்றாண்டில் ஜீவித்து வந்தது. சிறிய வயதில் ரசித்த இந்த வண்டு இனம் இல்லாதது வேதனையை தருகின்றது.

No comments:

Post a Comment