Saturday, May 20, 2017

மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆய்வு தகவல்

மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆய்வு  தகவல்

இந்தியாவிலேயே நகர்புறங்களில் வாழும் மக்கள் தொகை அதிகரிப்பு தமிழ்நாட்டில் அதிகம் என்று இன்றைய நாளிதழ் செய்தி ஒன்று பதிவு செய்துள்ளது. 

கிராமப்புறங்களில் இருந்து கல்வி, வேலைவாய்ப்பு என பெருநகர் மற்றும் நகரப்புறங்களுக்கு வருகை புரிந்தவர்கள் அதிகம். ஆனால் அவர்கள் தனிநபர்களாக தங்கியிருந்து தங்களது பணியை செய்து வந்ததும் வாரவிடுமுறை தினங்களில் தங்கள் கிராமத்திற்கு சென்று வருவதுமாக பழக்கம் இருந்தது. தற்போது அதனில் மாற்றம் ஏற்பட்டு கிராமத்தில் வயதானவர்களை விட்டுவிட்டு  வசதி தேடி நகர்புறங்களுக்கு குடிபெயர்கின்றார்கள். இதனால் கிராமப்புறங்கள் வெறும் விவாசாய கூலிகள் தங்கும் இடமாகி வளர்ச்சி அடையும் சாத்தியக் கூறுகளை இழக்க ஆரம்பிக்கின்றன. கிராமத்தில் மக்கள்தொகை குறையும் பொழுது அரசு அந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு  ஒதுக்கும் நிதியளவும், திட்டங்களும் குறையும். 

சென்னை, மும்பை, புதுடில்லியில் மக்கள்தொகை நெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திக்குறிப்பு சொல்கின்றது.  இதற்கான காரணம் என்ன?  சினிமா, அரசியல், கலை, எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், இன்னபிற துறையில் பிரபலமானவர்கள் சென்னையை தங்களது இன்னொரு முகவரியாக மாற்றிக் கொண்டு இடப்பெயர்ச்சி செய்கின்றனர். ஆனால் ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் பிரபலங்கள் தங்களது பூர்வீகத்தை விட்டு பெருநகரங்களுக்கு செல்வதில்லை அதனால் தான் அந்த மாநிலதலைகரம், பெருநகரங்களில் வாழும் மக்கள்தொகையில் பெரிய மாற்றமோ இடநெருக்கடியோ ஏற்படுவதில்லை. பெரும்பாலான அரசியல்வாதிகள் சென்னையிலும், முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள்  எம்பிக்களும் கூட டெல்லியை இருப்பிடமாகவே கொண்டு வாழ்க்கையை தொடர்கின்றார்கள். இதுவே டெல்லி, மும்பை சென்னை ஆகிய பெருநகரங்கள் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகள் பட்டியலில் இடம்பிடிக்க காரணமாக அமைகின்றது.

#மக்கள்தொகைஅதிகரிப்பு
#பெருநகரங்கள்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
20-05-2017

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...