Saturday, May 27, 2017

ஒசாமா பின் லேடன் குறித்த சமீபத்தில் வெளியான The Exile

வாசித்ததில் நேசித்தது. 

ஒசாமா பின் லேடன் குறித்த சமீபத்தில் வெளியான The Exile எனும் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கின்றேன். அந்த புத்தகத்தில் அவரது மறைவிடங்கள் குறித்தும் சொல்லப்பட்டு இருக்கின்றது. ஆனால் கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லை. ஆனாலும் அந்த புத்தகத்தில் வெகுஜன பிரதிநிதி ஒருவரின் கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.  அக்கருத்து மனதை கவர்ந்தது. 
 

அவர் கூறிய கருத்தின் சாரம்சத்தை உங்களுடன் பகிர்கின்றேன். 

நிரந்தரமான இந்த உலகில் ஆணென்றும் பெண்ணென்றும், அதிசய பிறவி என்றும் பலரும் பிறக்கலாம், வாழலாம், மண்ணில் புதையுண்டு போகலாம்.  ஆனால் மனித நேயம் என்னும் மானிட குணம் தான் என்றும் நிலைத்து நிற்கும். அதுவே வரலாற்று பாறைகளில் கல்வெட்டாக நிலைபெறும்.  

சண்டைகள்,கலகங்கள், மனித
உயிர்களை அழித்தல் என்பது தேவைதானா? சூழ்ச்சிகளாலும் வன்மங்களாலும் விளைவது  
என்னவாக இருக்கும்? நிச்சயம் தவறான உதாரணமாகவே இருக்கும். 

தன் முன்னேற்றத்திற்காக உழைத்தவர்களை எட்டி உதைப்பதும் அத்துடன் நில்லாமல் உயரத்தின் உச்சத்திற்கு ஏறிச் சென்று உதவியவர்களை அலட்சியப்படுத்துவதும் ஜனசக்தியின் ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். தன்னை நம்பியவர்களையும், தனக்கு உதவியவர்களையும் ரணத்தில் தள்ளிவிட்டு சென்றால்  தள்ளிவிட்ட உன் மரணம் கூட  மக்களின் மனதில் அனுதாபத்தை பெற முடியாது. 

மனித நேதத்திற்கு புறம்பாக நடந்துக் கொண்டால் அதனை வரலாற்றுப் பிழையாகவே எதிர்காலம் வாசிக்கும். உன்னை நம்பியவர்களை உனக்கு கரம் கொடுத்தவர்களை காயப்படுத்தாதே. 

அந்த புத்தகத்தில் படித்ததில் பிடித்த கருத்து இது. 

மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம் தான் உணர மறுக்கிறது. 

#மனிதநேயம் 
#ஒசாமாபின்லேடன் 
#Exile 
#KSRadhakrishnanpostings 
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷணன்
27-05-2017
 

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...