Friday, May 19, 2017

தொ(ல்)லைக் காட்சி தொடர்கள்.

துடைத்தொழிக்கப் பட வேண்டிய தொ(ல்)லைக் காட்சி தொடர்கள்.
------------------------------------
நேற்று(18/5/2017)சென்னை , காஸ்மாபாலிடன் கிளப்பில் நண்பர்களுடனும், வழக்கறிஞர்களுடனும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது சில நண்பர்கள் இந்த தொலைக்காட்சி தொடர்களை நிறுத்தவே முடியாதா? அந்தளவிற்கு குடும்பத்தில் ஊடுருவி கலந்துவிட்டது.கொடுமை.

தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் பல தொடர்கள்;வில்லன்-வில்லிகளுக்கும் ,
கதானாயகன்-கதானாயகிகளுக்கும் வித்தியாசம் இல்லையே?  

இரத்தக்கண்ணீர் படத்தில் நடிகவேல் எம்.ஆர்.இராதா வில்லன் தான். காரணம் என்னவெனில் எல்லா படத்திலும் அவர் வில்லனாகவே நடித்தார். இரத்தக் கண்ணீர் படத்திலும் வில்லனாக பார்த்துவிட்டோம். காதலை, தாம்பத்தியத்தை அறியாத   தன் மனைவிக்கு நண்பனை மறுமனம் செய்து வைப்பது வில்லன் செய்யும் செயலா?  இப்படி ஒரு கெட்டவன் வாழ்ந்தான் என்பதை அடையாளப்படுத்த  என் சிலையை  ஊர் நடுவில் வையுங்கள் என ஒப்புக் கொள்பவன் எப்படி அயோக்கியனாக இருக்க முடியும். அந்த நாடகத்தில் அவரே கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்தார். இன்றுள்ள நாயகன், நாயகி, வில்லன் வில்லி செயல்களில் வித்தியாசம் தெரியவில்லை. இருவருமே சமுதாய சீர்கேடானா செயல்களை தான் செய்கின்றார்கள். வில்லன் பழி வாங்க குடிக்கின்றான். நாயகன் சந்தோசத்திற்கு குடிக்கின்றார்.  வில்லன்,வில்லி பழிவாங்க கொலைத்திட்டம்தீட்டுகின்றனர்.
கதாநாயகன் கொலையை நியாயப்படுத்துகின்றான். சட்டத்திற்கு முன் இருவரும் குற்றம் புரிகின்றார்கள். ஆனால் கதாநாயகன் அதனை செய்யும் போது அதனை பார்ப்பவர்கள் நாமும் இதனை செய்யலாம் என்று சிந்திக்க தொடங்குகின்றார்கள். சமுதாயத்தில் இந்த தொடர்கள் இப்படியாகத்தான் சீரழிவை ஏற்படுத்துகின்றன.  வீட்டுக்கு வெளியே இருக்கும் அபாயங்கள் அபாயமாகவே  நமக்கு
அறிமுகமாகின்றன. ஆனால் வீட்டுக்குள் இருக்கும் இந்த அபாயம் , அபாயம் என அறியப்படாமலே வளர்கின்றது .

கதை என்றால் கதானாயகன் கதாநாயகியை மையமாக வைத்து கதையை நகர்த்துவார்கள். அதனால் தான் அவர்கள் கதாநாயகன், கதாநாயகி என்றழைக்கப்பட்டார்கள். ஆனால் வில்லன் வில்லியை மையமாக வைத்து  கதையை கொடூர
சிந்தனையுடன் கொண்டு செல்கின்றார்கள்.  அதுவும் 1500 எபிசோட்கள் வரை கொண்டு செல்லும் போது அதீத கற்பனை வளம் பெருக்கெடுத்து மக்களை முட்டாளாக்கி , மடையர்களாக்கி சிறை பிடிக்கின்றார்கள். கற்பனை என்பது நல்வழிப்படுத்துவதாக இருக்க வேண்டும். எல்லாம் லாபா நோக்கு வியாபாரம்.

நம்மை நாசப்படுத்துவதாகவே இருக்கின்றன் இன்றைய சீரியல்கள்.

விஜய் டீ.வியில் வரும் தொடர்கள் ஓரளவிற்கு  பரவாயில்லை. ஆனால் பிற சேனல்களில் வரும் சேனல்கள் அபாயமானது. 

குடும்ப சீரழவை உண்டாக்கும் சீரியல்கள் முறைபடுத்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதில் ஆர்வமுள்ளவர்கள் குரல் கொடுக்க  கேட்டுக்
கொள்கின்றேன்.

#தொலைக்காட்சிதொடர்கள் 
#சீரழிக்கும்சீரியல்கள் 
#KSRadhakrishnanpostings
#ksrpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
19-05-2017

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...