Sunday, May 14, 2017

எண்ணெய் குளியல்

கிராமங்களில் புதன், சனிக்கிழமை தவறாமல் எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும். சிறு வயதில் இந்த எண்ணெய் குளியல் எடுப்பது ஒரு சித்திரவதை என்று முனங்குவதுண்டு. இன்றைக்கு தெரிகின்றது அதனுடைய சுகம். எண்ணெய் குளியல் எடுத்தால் தயிர், பதநீர், மாம்பழம் சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். அதற்கு பதிலாக காரமாக மிளகு ரசம் போன்றவைகளை எடுத்துக் கொள்வது உண்டு.
எண்ணெயில் பூண்டு, மிளகாய், மிளகு, சீரகம் போட்டு சிறிது காய்ச்சி சூட்டோடு உடம்பில் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும். இன்றைக்கு ரீஃபைண்ட் ஆயில் கொண்டு உடம்பில் தேய்த்து கொள்கின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். எண்ணெய் குளியல் எடுப்பதால் பல நோய்கள் தவிர்க்கப்படுகின்றன. கண் குளிர்ச்சியடைந்து பார்வையும் சிரமமும் இல்லாமல் இருக்கும். தோல் பாதுகாப்புக்கும், முடி உதிர்வதை தடுப்பதற்கும் எண்ணெய் குளியல் உதவுகிறது. எண்ணெய் குளியல் எடுத்த பிறகு இயற்கையாகவே தூக்கம் வரும். உடல் இயக்கத்திற்கும், மூட்டு இணைப்பிற்கும், ஆயுளையும் பலப்படுத்தும். இன்றைக்கு பல பகுதிகளில் உடம்பை பிடித்துவிட்டு (மசாஜ்) எண்ணெய் குளியல் என்று விளம்பரங்கள் வருகின்றன. அவை எந்த அளவிற்கு பலனளிக்கும் என்று தெரியவில்லை. நகர வாழ்க்கையில் இதெல்லாம் தொலைந்து போன அன்றாட நடவடிக்கையாக ஆகிவிட்டது.

#எண்ணெய்_குளியல்
#oilbath
#ksrpostings
#ksradhakrishnanpostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
15/05/2017

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...