Saturday, May 13, 2017

கிருபளானி

கிண்டி ராஜ்பவன் செல்லும் போதெல்லாம் ஆச்சார்யா ஜேபி   நினைவுக்கு வருவார். ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் உற்ற தோழர் ஆவார். 

பண்டித நேருவிடமே தயவு தாட்சன்யமின்றி தவறுகளை சுட்டிக் காட்டுபவர். நேர்மையான, எளிமையான இவரின் மனைவி தான் இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சராக உத்திர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சரான சுதேதா கிருபளானி ஆவார். பிரபுதாஸ் பட்வாரி தமிழகத்தின் கவர்னராக இருக்கும் போது சிலகாலம் 

விருந்தினராக ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்தார். அப்போது பிரபுதாஸ் பட்வாரி ராஜ்பவனில் புகைப்பிடிப்பதையும், அசைவ உணவுகளையும் 1978-79 களில் 

தடைவிதித்திருந்தார். அப்போதைய குடியரசுத் தலைவர் நீலம்  சஞ்சீவ ரெட்டி சென்னைக்கு வந்தபோது அவருக்கு ராஜ்பவனில் தங்கியிருந்த போது அசைவ 

உணவை அவர் கேட்டும் மறுக்கப்பட்டது. அப்போது அது ஒரு சர்ச்சையாகவே இருந்தது. SIET பெண்கள் கல்லூரி பேராசிரியர்களுடைய வேலைநிறுத்தம் 

குறித்து எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் அப்போது கவர்னர் பட்வாரியை சந்திக்க செல்வதுண்டு. அந்த காலக்கட்டத்தில் மாணவர் அரசியல் அமைப்பில் இருந்ததால் 

அங்கு தங்கியிருந்த ஆச்சார்யா ஜேபி கிருபளானியையும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. ஆச்சார்யா ஜேபி கிருபளானி எங்களை அழைத்து பேசிக் 

கொண்டிருப்பார். தேநீர், சில நேரங்களில் மதிய உணவு கூட அவருடன் உண்டது உண்டு. ஒரு முறை அவர் சொன்னது இன்றைக்கும் சரியாகவே மனதிற்கு 

தோன்றுகின்றது. அவர் சொன்னார், “அரசியலில் தன்னுடைய புகழை நிலைநாட்டவே அணுகுமுறைகளும், போராட்டங்கள் நடத்தினால் சுயநலமே. அது பொது 

வாழ்வல்ல. தன்னோடு பணியில் இருந்தவருடைய நலனையும் சிந்தித்து அரசியலை கொண்டு செல்ல வேண்டும். சிலர் தங்களின் புகழ், சுயநலம் மனதில் 

கொண்டு பொது வாழ்வில் தியாகம் செய்வதாக போலியாக கஷ்டப்பட்டு போராட்டங்களில் தங்களை காட்டிக்கொள்வதால் எதிர்வினைதான் மிஞ்சும். உண்மை, 

எதார்த்தம் இருந்தால்தான் பலாபலன் உண்டு. தன்னை தொடர்பவர்களின் நலனையும் கவனிக்காமல் காரியங்களை ஆற்றினால் அனைத்தும் கட்டமைப்பும் 

சிதைந்துவிடும். கட்டமைப்பே இல்லாவிட்டால் கொள்கை, இலட்சியம், அமைப்பு ரீதியாக என்ன செய்ய முடியும். இது; அரசியலும், பௌதீக கொள்கைகளை 

ஒற்றிருக்கும். எந்த நடவடிக்கையும், சரியாக சீராக எடுத்துச் சென்றால் தான் நாம் நினைக்கின்ற காரியங்கள் என்று ஆச்சார்யா ஜேபி கிருபளானி சொன்ன 

வாக்கியங்கள் நாற்பது ஆண்டுகளுக்கு பிறகும் காதில் ரீங்காரமிடுகின்றது.”


#கிருபளானி

#ksrpostings

#ksradhakishnanpostings

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

13/05/2017

 

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...